கோடைக்காலத்தில் தடையற்ற சேவையை உறுதி செய்வதற்காக தண்ணீா் ஏடிஎம்களில் என்டிஎம்சி ...
பண்ருட்டி: 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நுண் கற்காலக் கற்கருவி கண்டெடுப்பு
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே சுமார் 8 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான நுண் கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டன.
இதைக் குறித்து தொல்லியல் ஆய்வாளர் கூறியதாவது:
நுண் கற்காலக் கருவியின் பயன்பாடு:
பழைய கற்கால மக்களால் தயாரிக்கப்பட்ட கரடுமுரடான கல் ஆயுதங்களைக் கொண்டு விலங்குகளை விரட்டிச் சென்றுதான் வேட்டையாட முடியும். இதனால் அதிகம் மனித உழைப்பும் விலங்குகளால் ஏற்படும் மனித உயிரிழப்பும் தவிற்க முடியாததாக இருந்தது. ஆனால் நுண்கற்கால மக்கள் தயாரித்த கற்கருவிகள் சிறியனவாக இருந்தால் இவைகளை அம்பு , ஈட்டியின் முனைகளில் பொருத்தி தூரத்தில் இருந்து வேட்டையாடுகின்ற போது விலங்குகளின் உடலைதுளைக்கும் வகையில் மிகக் கூர்மையானதாக இருந்தது. இதனால் மனித உயிரிழப்பும், அதிக உடலுழைப்பும் தவிர்க்கப் பட்டது. எனவேதான் இக்காலக்கட்டத்தை மானுட அறிவு வளர்ச்சியின் படிநிலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் வேட்டை சமூகமாக இருந்த நுண்கற்கால மக்கள் சிறிய அளவிலான கற்கருவிகள் பொருத்தப்பட்ட வில்லம்பு மற்றும் ஈட்டிகளைப் பயன்படுத்துவதற்கு எளிதாக இருந்ததால் தங்களின் சுய பாதுகாப்பிற்காக இவ்வாயுதங்களை தங்களோடு நிலையாக வைத்துக் கொண்டனர், மேலும் நீளமான குச்சியின் முனைகளில் இணைத்து ஈட்டி போன்ற ஆயுதத்தை உருவாக்கி தூரத்தில் இருக்கும் விலங்குகளை வேட்டையாடவும் இக்கற்கருவிகளை பயன்படுத்தியுள்ளனர்
இச்சிறியவகை கற்கருவிகளை அம்பின் முனைகளில் இணைத்து மெல்லிய தோலினை கொண்ட மான் , முயல் , பறவை ஆகியவைகளை வேட்டையாடவும் அவைகளின் சதைகளை அறுப்பதற்கும் இக்கற்கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்டத்தில் முந்தைய கண்டுபிடிப்புகள்
கடலூர் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் உள்ள ஊர்களான மருங்கூர் , பாலக்கொல்லை, ஒடப்பன்குப்பம் , பத்திரக்கோட்டை , மேலிருப்பு ஆகிய ஊர்களில் நுண்கற்கால கருவிகளான பிறைவடிவ வடிவிலான கருவி, சிறிய அளவிலான அம்பு முனை கருவிகள், செதுக்கு கருவிகள், கற்சீவல்கள், தட்டுவடிவ கற்கருவிகள், அறுப்பதற்கு ஏற்ற சிறிய பிளேடு கத்திகள், சுரண்டி கருவிகள் ஆகியவை 2010 ஆம் ஆண்டு தொல்லியல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் கடலூர் பகுதியில் கண்டெடுத்தார்.
குறிப்பாக ஒடப்பன்குப்பம் பகுதியில் நுண் கற்காலக் கருவி தயாரித்தற்கான தொழிற்கூடம் இருந்துள்ளத்தையும் இவர் கண்டுபிடித்துள்ளார்.
மாணவர்களைச் சந்திக்கச் சென்ற ராகுல் காந்தி! தடுத்து நிறுத்திய காவல்துறை!
பண்ருட்டி பகுதியின் தற்போதைய கண்டுபிடிப்பு
உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றில் தற்போது கண்டறியப்பட்ட நுண்கற்கால கருவியின் உயரம் 2.5 செ.மீ, நீளம் 2 செ.மீ இவை விலங்கின் தோலை அறுப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பிளேடு வகை , இதன் காலம் சுமார் 8 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானவை. கடலூர் மாவட்டம் ஒடப்பன்குப்பம் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது போலவே இந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், முந்தைய கண்டுபிடிப்புகளுக்கு வலுசேர்க்கும் வகையில் தற்போது கண்டுபிடித்த நுண் கற்காலக் கருவி ஆதாரமாக உள்ளது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் பழைய கற்காலம் கருவிகள் , நுண் கற்காலக் கருவிகள் , பெருங்கற்காலம் (இரும்பு காலம் ) , சங்ககாலம் , பல்லவர் காலம், சோழர் காலம் , விஜயநகர காலம் வரை நமக்கு கிடைக்க கூடிய தொல்லியல் சான்றுகள் மூலம் கடலூர் மாவட்ட வரலாற்றின் தொடர்ச்சி நமக்கு இப்போதுதான் கிடைத்து வருகின்றது என்றார் இம்மானுவேல்.