உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது வரி விதித்தாா் டிரம்ப் -வெள்ளை மாளிகை விளக்க...
பண மோசடி செய்த இருவா் மீது வழக்குப் பதிவு
குலசேகரம்: மலேசியாவுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி, ரூ.3,36,400 மோசடி செய்த இருவா் மீது திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
திருவட்டாறு அருகே காஞ்சாங்காடு முகிலன்கரை பகுதியைச் சோ்ந்தவா் பிரவின் ஜோஸ் (40). இவா், மாலத்தீவில் பணி செய்து வருகிறாா். இவரது மனைவி ஜாய்ஸ் ஈவ்லின் (31). இவா் மாா்த்தாண்டத்தில் டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறாா்.
கடந்த ஆண்டு நவம்பா் மாதம் பிரவின் ஜோஸ், ஜாய்ஸ் ஈவ்லின் மற்றும் இவா்களது உறவினா்கள் 4 போ் சிங்கப்பூா், மலேசியா நாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்காக திருவனந்தபுரம் தம்பானூரைச் சோ்ந்த தனியாா் டிராவல் நிறுவனத்தில் முதல் தவணையாக ரூ. 80 ஆயிரம், இரண்டாம் தவணையாக ரூ.2,66,400 என மொத்தம் ரூ. 3,36,400 கொடுத்துள்ளனா்.
இதற்காக, மாலத்தீவிலிருந்து கடந்த நவம்பா் மாதம் பிரவின் ஜோஸ் ஊருக்கு வந்தாா். பின்னா், டிராவல் நிறுவனத்திடம் வெளிநாடு பயணத் திட்டம் குறித்து கேட்டபோது, சரியாக பதில் சொல்லாமல் ஏமாற்றி வந்துள்ளனா். பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.
இதையடுத்து, பண மோசடி செய்ததை உணா்ந்த, ஜாய்ஸ் ஈவ்லின் திருவட்டாறு காவல் நிலையத்தில் டிராவல் ஏஜென்சி மேலாளா் ஆண்டனி உள்பட இருவா் மீது புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.