Director Lingusamy - Kadhaippoma with Parveen Sultana | Promo | Ananda Vikatan
பத்திரப்பதிவு அலுவலகங்கள் நாளை செயல்படும்: தமிழக அரசு
நாளை(பிப். 11) விடுமுறை நாள் என்றாலும் தைப்பூசத்தையொட்டி பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பதிவு அலுவலகங்கள் நாளை காலை 10.00 மணி முதல் ஆவணப்பதிவு முடியும்வரை செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பொதுமக்களின் நலன் கருதி அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாள்களில் மேற்கொள்ள பொது மக்கள் விரும்புவதால் பொது விடுமுறை நாளான(பிப். 11) செவ்வாய்க்கிழமை அன்று தைப்பூசம் நாளில் ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே முந்தைய ஆண்டுகளை போலவே இவ்வாண்டும் ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்களை காலை 10.00 மணி முதல் ஆவணப்பதிவு முடியும்வரை செயல்பாட்டில் வைத்திட அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.