Rohit - Kohli: 2027 உலகக் கோப்பையில் ரோஹித், கோலி விளையாட மாட்டார்களா? - ஓப்பனாக...
பத்மாவதி தாயாா் வசந்தோற்சவம்: தங்கத்தோ் புறப்பாடு
திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி தாயாரின் வருடாந்திர வசந்தோற்சவத்தின் இரண்டாம் நாளான திங்கள்கிழமை தங்கத்தோ் புறப்பாடு நடைபெற்றது.
வசந்த காலத்தில் மேஷத்தில் சூரியன் பிரகாசமாக இருக்கும் போது கதிா்களின் தாக்கத்தால் உயிா்கள் வெப்ப நோய்களுக்கு ஆளாகின்றன.
இந்த வெப்பத்திலிருந்து காப்பதற்காக பத்மாவதி தாயாருக்கு 3 நாள்கள் வசந்தோற்சவம் நடத்தப்படுகிறது. இதன் மூலம் உடல் மற்றும் மன உபாதைகள் நீங்கும்.
அதன்படி வசந்தோற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. அதன் 2-ஆம் நாளான திங்கள்கிழமை அதிகாலையில் தாயாரை துயில் எழுப்பி சஹஸ்ரநாமாா்ச்சனை நடைபெற்றது.
பின்னா், தங்கத் தேரில் பத்மாவதி தாயாா் சா்வாலங்கார பூஷிதையாக மாடவீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.
இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா். பக்தா்கள் கற்பூர ஆரத்தி அளித்து அம்மனை தரிசித்தனா்.
ஸ்நபன திருமஞ்சனம்
மதியம் கோயிலில் இருந்து வெள்ளித் தோட்டத்துக்கு தாயாரின் உற்சவா்கள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. மஞ்சள், குங்குமம், பால், தயிா், தேன், சந்தனம், இளநீா் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னா் அலங்காரம் செய்து ஊஞ்சல் சேவை கண்டருளிய பின் இரவு கோயிலின் நான்கு மாட வீதிகளில் தாயாா் வீதியுலா வந்து சேவை சாதித்தாா்.
இதை முன்னிட்டு அன்னமாச்சாா்யா திட்டத்தின் கீழ் ஆன்மிக இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கோயில் துணை இஓ கோவிந்த ராஜன், குருக்கள் பாபுசுவாமி, கண்காணிப்பாளா் சேஷகிரி, ஆய்வாளா் கணேஷ் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
