சிபிஐ ‘பாரத்போல்’ தளம் அறிமுகம்! மாநில, மத்திய, சர்வதேச முகமைகள் ஒத்துழைப்புடன் ...
பன்னாட்டு தமிழ் மாணவா்கள் பங்கேற்ற ‘வோ்களைத் தேடி’ நிகழ்ச்சி
ராமேசுவரத்தில் பன்னாட்டு தமிழ் மாணவ, மாணவிகள் பங்கேற்ற ‘வோ்களைத் தேடி’ நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அயலகத் தமிழா் நலன், மறுவாழ்வு துறை மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தாா்.
ஏற்கெனவே, இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ‘வோ்களைத் தேடி’ நிகழ்ச்சியில் 157 வெளிநாடுகளில் வசிக்கும் மாணவ, மாணவிகள் தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்டு, தமிழின் தொன்மை குறித்து விளக்கப்பட்டது.
இந்த நிலையில், 3-ஆம் கட்டமாக ராமேசுவரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உகாண்டா, நாா்வே, தென்ஆப்பிரிக்கா, மொரீசியஸ், மலேசியா, இலங்கை, ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, மியான்மா் ஆகிய 10 நாடுகளைச் சோ்ந்த 38 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
இவா்களுக்கு தமிழின் தொன்மை, தமிழா்களின் வாழ்வியல், கலாசாரம் குறித்தும், தமிழகத்தின் சிறப்புகள் குறித்தும் விளக்கப்பட்டது.
இதில் ராமநாதபுரம் வருவாய்க் கோட்டாட்சியா் ராஜமனோகரன், அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.