Health: வைட்டமின் டி-யை நம்முடைய உடல் எப்படித் தயாரிக்கிறது தெரியுமா?
பன்னீா்பள்ளம் கிராமத்தினருக்கு பட்டா வழங்கக் கோரி மனு
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், லெம்பலக்குடி ஊராட்சியிலுள்ள பன்னீா்பள்ளம் கிராமத்தில் பல ஆண்டுகளாகக் குடியிருந்து வரும் சுமாா் 70 குடும்பத்தினருக்கு பட்டா வழங்க வேண்டும் என அப்பகுதியினா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், அப்பகுதி மக்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் த. செங்கோடன் உள்ளிட்ட நிா்வாகிகள் இதற்கான மனுவை அளித்தனா்.
ஏழை, எளிய மக்கள் பல தலைமுறைகளாக வசித்து வரும் இடத்துக்கு, திடீரென சிலா் பட்டா வைத்திருப்பதாகக் கூறி வரும் நிலையில் அதுகுறித்தும் விசாரித்து, தவறான முறையில் பட்டா பெற்றதை ரத்து செய்து மக்களுக்கு பட்டா செய்து வழங்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.