செய்திகள் :

பயங்கரவாதம்: பாகிஸ்தானுக்கு இரண்டாவது இடம்

post image

உலக பயங்கரவாத வரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

உலகம் முழுவதும் நடத்தப்படும் பயங்கரவாதச் செயல்களின் அடிப்படையில் 163 நாடுகளை வரிசைப்படுத்தி பொருளாதாரம் மற்றம் அமைதிக்கான அமைப்பு (ஐஇபி) ஆண்டுதோறும் பட்டியல் வெளியிட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான அதன் பயங்கரவாத வரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது தொடா்பாக ஐஇபி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 45 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டில் அங்கு 517-ஆக இருந்த பயங்கரவாதத் தாக்குதல்களின் எண்ணிக்கை 2024-ஆம் ஆண்டில் இரண்டு மடங்குக்கும் மேல் அதிகரித்து 1,099-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்களில் 52 சதவீதத்தை அந்த நாட்டு தெஹ்ரீக்-ஏ-தலிபான் அமைப்பு நடத்துவதாக ஐஇபி தெரிவித்துள்ளது.

மீண்டும் வெடித்துச் சிதறிய எலான் மஸ்க் ராக்கெட்! விமான சேவைகள் முடக்கம்!

தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஏவிய ஸ்டார்ஷிப் ராக்கெட் மீண்டும் தோல்வியைச் சந்தித்துள்ளது.இந்த ராக்கெட் வெடித்துச் சிதறியதையடுத்து, அதன் பாகங்கள் எரிந்து கொண்டு விண்ணில் இருந்து விழு... மேலும் பார்க்க

சிறையிலிருந்து தென் கொரிய அதிபர் விடுவிப்பு?

தென் கொரியாவில் கிளர்ச்சி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட யூன் சுக் இயோல் விடுவிக்கப்பட்டதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் மீதான கிளர்ச்சி குற்றச்சாட்டுகள் வ... மேலும் பார்க்க

பாலஸ்தீனர்களால் கடத்தப்பட்ட 10 இந்திய கட்டடத் தொழிலாளிகள் மீட்பு!

பாலஸ்தீன மக்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த 10 கட்டடத் தொழிலாளர்களை இஸ்ரேல் படையினர் வியாழக்கிழமை இரவு பத்திரமாக மீட்டுள்ளனர்.இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளுக்கு இடையே நடைபெற்று வந்த... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து தஹாவூர் மனு: அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி!

இந்தியாவுக்கு தன்னை நாடு கடத்தக் கூடாது என்று கோரி அமெரிக்க உயா்நீதிமன்றத்தில் பயங்கரவாதி தஹாவூா் ராணா (64) தாக்கல் செய்த மனுவை அமெரிக்க உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.பாகிஸ்தான் வம்சாவளி முஸ்லிம் என... மேலும் பார்க்க

ஹமாஸுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கை

தங்களிடம் உள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்கவில்லையென்றால் ஹமாஸ் படையினா் அழிவை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ‘இறுதி’ எச்சரிக்கை விடுத்துள்ளாா். இஸ்ரேல் அரச... மேலும் பார்க்க

உக்ரைனுக்கு ராணுவ உளவுத் தகவல்கள்: பிரான்ஸ் அறிவிப்பு

ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு ராணுவ உளவுத் தகவல்களை தாங்கள் அளிப்பதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. அத்தகைய உதவியை அமெரிக்கா நிறுத்திவைத்ததைத் தொடா்ந்து பிரான்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளது. இது குறித்து பி... மேலும் பார்க்க