தொகுதி மறுசீரமைப்புக்காக குரல் எழுப்புவோம்: திமுக எம்.பி.க்கள் தீர்மானம்!
மாடியில் இருந்து குதித்து ஐஎஃப்எஸ் அதிகாரி தற்கொலை!
தில்லி வெளியுறவுத் துறை அமைச்சக குடியிருப்பின் மாடியில் இருந்து குதித்து இந்திய வெளியுறவு சேவை(ஐஎஃப்எஸ்) அதிகாரி வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
முதல்கட்டத் தகவலில், தற்கொலை செய்துகொண்டவர் ஜித்தேந்திர ராவத் என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க : கடல் பேய்களைத் தேடிப்போகும் ஜிவி, கரை சேருவாரா? - கிங்ஸ்டன் திரைவிமர்சனம்
மத்திய தில்லியின் சாணக்யபுரி பகுதியில் அமைந்துள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் குடியிருப்பில் முதல் மாடியில் ஜித்தேந்திர ராவத் என்ற ஐஎஃப்எஸ் அதிகாரி வசித்து வந்தார்.
இவர், தனது தாயுடன் வசித்து வரும் நிலையில், இன்று காலை 6 மணியளவில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அவரது உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவியும் குழந்தையும் டேராடூனில் இருந்து தில்லிக்கு விரைந்துள்ளனர்.