பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் பலி!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோப்போர் பகுதியில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோப்போர் மாவட்டத்தின் ஜலூரா குஜ்ஜார்பதி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக இந்திய ராணுவத்தினர் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (ஜன.19) இரவு முதல் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
இதையும் படிக்க: முன்னாள் மனைவியைக் கட்டிவைத்து ஆசிட் தாக்குதல் நடத்தியவர் கைது!
இந்நிலையில், இன்று (ஜன.20) அதிகாலை துப்பாக்கிச் சூடு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. அப்போது, இருதரப்புக்கும் மத்தியிலான துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். பின்னர், அவரை அங்கிருந்து மருத்துவ உதவிக்காக ராணுவத்தினர் மீட்டு வெளியே கொண்டுவர முயற்சித்தனர். ஆனால், அவர் அதற்குள் பலியானார்.
பலியான ராணுவ வீரர் குறித்த தகவல்கள்எதுவும் இன்னும் தெரிவிக்கப்படாத நிலையில், பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.