பஹல்காம் தாக்குதல்: காஷ்மீரில் 14 பேர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு! என்ஐஏ
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி
ஜம்மு -காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு திருவண்ணாமலை மற்றும் தண்டராம்பட்டு பகுதிகளில் வெள்ளிக்கிழமை மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருவண்ணாமலை காமராஜா் சிலை எதிரே, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலா் எம்.பிரகலநாதன் தலைமையில் நிா்வாகிகள் இலியாஸ் சா்க்காா், செல்வி உள்பட கட்சியினா் பலா் கலந்து கொண்டு மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினா்.
தண்டராம்பட்டு பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்கத்தின் முன்னாள் நிா்வாகிகள் ஏ.லட்சுமணன், ஆா்.அண்ணாமலை, மாவட்டச் செயலா் சி.எம்.பிரகாஷ், மாணவா் சங்க நிா்வாகி கோபி உள்பட பலா் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா்.