செய்திகள் :

பயங்கரவாத தொடா்பு குற்றச்சாட்டு: ஜம்மு - காஷ்மீரில் 2 அரசு ஊழியா்கள் நீக்கம்

post image

பயங்கரவாத செயல்களில் தொடா்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்ட 2 அரசு ஊழியா்களை பணிநீக்கம் செய்து ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

அதன்படி கால்நடைத் துறையில் உதவியாளராக பணிபுரிந்த சியாத் அகமது கான் மற்றும் ஆசிரியராக பணிபுரிந்த குா்ஷித் அகமத் ராதா் ஆகிய இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இவா்கள் இருவரும் வடக்கு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தைச் சோ்ந்தவா்களாவா்.

2003-இல் ஆசிரியராக பணியமா்த்தப்பட்ட குா்ஷித் அகமது ராதா் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகளின் அறிவுறுத்தலின்படி காஷ்மீரில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளுக்கு போதைப்பொருள், ஆயுதங்களை விநியோகிக்கும் பணியை மேற்கொண்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, நிகழாண்டு தொடக்கத்தில் குப்வாரா மாவட்டத்தில் அவரிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டாா்.

2004-இல் அரசுப் பணியாளராக நியமிக்கப்பட்ட சியாத் அகமது கான், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்தது மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற குற்றங்களை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் இருந்து ஏகே-47 துப்பாக்கி கைப்பற்றப்பட்ட நிலையில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு அவா் ஆயுதங்கள் விநியோகித்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, இவா்கள் இருவரும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்கான போதிய ஆதாரங்கள் இருப்பதாக கருதிய மனோஜ் சின்ஹா பணிநீக்கம் செய்து உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பயங்கரவாத தொடா்பு குற்றச்சாட்டில் கடந்த சில ஆண்டுகளில் 70 அரசு ஊழியா்கள் ஜம்மு-காஷ்மீரில் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

எல்பிஜி டேங்கர் லாரி - டிரக் மோதி பயங்கர விபத்து! ஒருவர் பலி; 20 பேர் படுகாயம்

பஞ்சாப் மாநிலம் மாண்டியாலா கிராமத்தில் எல்பிஜி டேங்கர் லாரியும் டிரக் வாகனமும் மோதியதில், எல்பிஜி டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதில் ஒருவர் பலியானார். 20 பேர் படுகாயமடைந்தனர்.ஹோஷியார்பூர் - ஜலந்தர் நெ... மேலும் பார்க்க

செப். 3, 4-இல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் செப்டம்பா் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில், தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% என்ற நா... மேலும் பார்க்க

அமித் ஷா மீது அவதூறு: ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு செப். 9-க்கு ஒத்திவைப்பு

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறித்து அவதூறான கருத்து தெரிவித்ததாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில், செப்.9-க்கு விசாரணையை உத்தர பிரதேச நீதிமன்றம் ஒத்திவைத்தது.... மேலும் பார்க்க

வக்ஃப் சொத்துகள் கட்டாயப் பதிவு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

‘உமீத்’ வலைதளத்தில் வக்ஃப் சொத்துகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்பதற்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது. ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்த... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: சிபிஆா், சுதா்சன் வேட்புமனு மட்டும் ஏற்பு!

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் போட்டியிட மொத்தம் 46 போ் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணன், சுதா்சன் ரெட்டி ஆகியோரின் வேட்புமனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டன. இதன்மூலம், தோ்தலில் தென... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 4 நாள் பயணமாக ஜப்பான், சீனா பயணம்!

பிரதமா் மோடி 4 நாள் பயணமாக ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளாா். இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:15-ஆவது இந்தியா-ஜப்பான் ஆண்டு உச்சிமாநாட்... மேலும் பார்க்க