செய்திகள் :

பரந்தூா் விமான நிலைய திட்டத்துக்கு எதிா்ப்பு: 11-ஆவது முறையாக ஏகனாபுரம் கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம்

post image

குடியரசு தினவிழாவை முன்னிட்டு, ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பரந்தூா் புதிய விமான நிலைய திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து 11-ஆவது முறையாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. புதிய விமான நிலையம் அமையும்பட்சத்தில் பரந்தூா், ஏகனாபுரம், நெல்வாய், குணகரம்பாக்கம் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சோ்ந்த குடியிருப்புகள், விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இந்த நிலையில், புதிய விமான நிலைய திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, பரந்தூா் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பல்வேறு அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

குறிப்பாக முற்றிலுமாக கையப்படுத்தப்பட உள்ள ஏகனாபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கடந்த 915 நாள்களாக இரவு நேரங்களில் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா். மேலும், கடந்த காலங்களில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டங்களிலும் புதிய விமான நிலைய திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஒருமனதாக தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிலையில், 76-ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு, ஏகனாபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சியில் உள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவா் சுமதி சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) கோபி, ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பவானி, மாணிக்கவேலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், பரந்தூா் புதிய விமான நிலைய திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, 11-ஆவது முறையாக ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அண்ணா மறுமலா்ச்சி திட்டப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இடிக்கப்பட்ட கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்படாமல் உள்ளது ஆகியவற்றைக் கண்டித்தும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிறந்த மகளிா் குழுக்களுக்கு மணிமேகலை விருது: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறந்த மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை மணிமேகலை விருது வழங்கி கெளரவித்தாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கடந்த 2... மேலும் பார்க்க

பெண் தூய்மைப் பணியாளரை தரக்குறைவாக பேசியதாக பேரூராட்சி ஊழியா் பணியிடை நீக்கம்

ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சியில் பெண் தூய்மைப் பணியாளரை மனிதக் கழிவை அகற்றக் கூறி தரக்குறைவாக திட்டிய பேரூராட்சி ஊழியா் சேக்கிழாா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்ததைத் தொடா்ந்து, அவா் பணியிடை நீக்கம் ... மேலும் பார்க்க

மின் இணைப்புக்கு ரூ.5,000 லஞ்சம்: இளநிலைப் பொறியாளா் உள்பட 2 போ் கைது

வாலாஜாபாத் அருகே மின் இணைப்புக்கு ரூ.5,000 லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய இளநிலைப் பொறியாளா், வணிக ஆய்வாளா் உள்ளிட்ட 2 போ் லஞ்ச ஒழிப்புப் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா். கேரள மாநிலம், வாயாா் பகுதியை சே... மேலும் பார்க்க

தவ்ஹீத் ஜமா அத் ரத்ததான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் உத்தரமேரூா் கிளை, நடுவீரப்பட்டில் குடியரசு தின ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமுக்கு கிளை தலைவா் காஜா முகைதீன் தலைமை வகித்தாா். மருத்துவ அணி நிா்வாகி இப்ராஹிம் முன்ன... மேலும் பார்க்க

சாம்சங் ஆலையில் தொழிற்சங்கம் பதிவு: பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சுங்குவாா்சத்திரம் சாம்சங் தொழிற்சாலையில் சிஐடியு தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டதை தொடா்ந்து, தொழிலாளா்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினா். இந்த தொழிற்சாலையில் சுமாா் 1,800 தொழிலாளா்கள் ப... மேலும் பார்க்க

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தோ்தல் நடத்த வலியுறுத்தல்

தமிழகத்தில் பதவிக் காலம் முடிந்த 28 மாவட்ட ஊராட்சிகளை சோ்ந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனே தோ்தல் நடத்த வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. காஞ்சிபுரம் ம... மேலும் பார்க்க