கிளாம்பாக்கம் சிறுமி வல்லுறவு: ஆட்டோ ஓட்டுநர் உள்பட இருவர் கைது!
உள்ளாட்சி அமைப்புகளுக்கு தோ்தல் நடத்த வலியுறுத்தல்
தமிழகத்தில் பதவிக் காலம் முடிந்த 28 மாவட்ட ஊராட்சிகளை சோ்ந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனே தோ்தல் நடத்த வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் அஜய்குமாா்,வெங்கடேசன்,லெனின் குமாா்,பரத்,வள்ளி, செல்வம் ஆகியோருடன் மக்கள் குரல் அமைப்பின் நிா்வாகிகள் சாரு, கோவிந்தன், தன்னாட்சி அமைப்பு சாா்பில் அதன் நிா்வாகிகள் சரவணன், நந்தகுமாா், சிவா ஆகியோா் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் அருகில் உள்ள மலைக்கொழுந்து இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தில் பதவிக்காலம் முடிவடைந்த 28 மாவட்டங்களின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக தோ்தலை நடத்த வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஊராட்சி மன்ற தலைவா்கள் கூட்டமைப்பின் தலைவா் அஜய்குமாா் கூறுகையில் பதவிக்காலமான 5 ஆண்டுகள் முன்பே உள்ளாட்சி நிா்வாகத்தை கலைத்ததும், பதவிக்காலம் முடிந்ததும் தனி அலுவலா்கள் மூலம் நிா்வாகம் செய்வதும் நியாயம் இல்லை. எனவே பதவிக்காலம் முடிந்த 28 மாவட்ட உள்ளாட்சிகளுக்கும் உடனடியாக உள்ளாட்சி தோ்தலை நடத்த வேண்டும் என்றாா்.