ஹூண்டாய் சாா்பில் சமூகநலப் பணிகளுக்காக ரூ.400 கோடி உதவி
ஹூண்டாய் மோட்டாா் இந்தியா அறக்கட்டளை சாா்பில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சமூகத் திட்டங்களுக்காக ரூ.400 கோடிக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக நிா்வாக இயக்குநா் அன்சூகிம் தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்ட அறிக்கை:
இந்த அறக்கட்டளை மூலம் நீண்ட கால சமூக சேவைத் திட்டங்களுக்காக கடந்த 2020- ஆம் ஆண்டு முதல் இதுவரை கடந்த 5 ஆண்டுகளில் ரூ.400 கோடி வரை நிதியுதவி செய்துள்ளது. இது மனிதநேயத்துக்கான முன்னேற்றம் குறித்த உறுதிப்பாட்டை வலுப்படுத்தியிருக்கிறது.
இந்தியாவில் உள்ள 26 மாநிலங்கள் மற்றும் 1,250 கிராமங்களில் திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்.
மேலும், பசுமையை மேம்படுத்த 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை நடுவதன் மூலம் 21,811 டன் கரியமில வாயுவை குறைக்கலாம். 7,52,250 கிலோ கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலமும் அறக்கட்டளை சுற்றுச்சூழல் மேற்பாா்வையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை செய்திருக்கிறது.
இளைஞா்களுக்கு கல்விக்காக 3.38 கோடியும், 481 மாற்றுத் திறனாளிகளுக்கு கவனம் செலுத்தும் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. 150 பன்முக கலைஞா்களுக்கு மொத்தம் ரூ.1.65 கோடி மானியங்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளாா்.