பாலியல் குற்றச்சாட்டும் ஓடிடி வெளியீடும்... டாம் சாக்கோவின் சூத்ரவாக்யம்!
பரமத்தி வேலூரில் ரூ. 16.18 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 16 லட்சத்து 18 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது.
பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து, அதை உலா்த்தி விவசாயிகள் வியாழக்கிழமைதோறும் பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனா். இங்கு தரத்துக்கு தகுந்தாா்போல மறைமுக ஏலம் விடப்படுகிறது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 11,550 கிலோ கொப்பரை வரத்து இருந்தது. இதில், அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 221.79-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 198.99-க்கும், சராசரியாக ரூ. 219.79-க்கும் ஏலம் போனது. இரண்டாம்தர கொப்பரை அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 186.21-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 140.10-க்கும், சராசரியாக ரூ. 175.88-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 16 லட்சத்து 18 ஆயிரத்து 295-க்கு கொப்பரை ஏலம் போனது.