பராமரிப்பு பணியின்போது கீழே விழுந்த தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
திருச்சியில் தனியாா் நிறுவன ஊழியா், கட்டட பராமரிப்பு பணியின்போது கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுாா், நெ.1 டோல்கேட் பகுதியைச் சோ்ந்தவா் திருமலை (46). தில்லைநகரில் உள்ள கணினி பழுது நீக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். வியாழக்கிழமை அவா் அந்நிறுவன கட்டடத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருந்தாா். சுமாா் 30 அடி உயரத்தில் அமா்ந்து ஜன்னலை சுத்தம் செய்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்தாா். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் திருமலை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
புகாரின் பேரில், உறையூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.