பரோடா வங்கியில் மேலாளர், அலுவலர் பணிகள்: விண்ணப்பிப்பது எப்படி?
பரோடா வங்கியில் காலியாக உள்ள 417 மேலாளர், அலுவலர் பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து வரும் 26 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.: BOB/HRM/REC/ADVT/2025/11
பணி: Manager (Sales)
காலியிடங்கள்: 227
தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 24 முதல் 34-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Officer(Agriculture Sales)
காலியிடங்கள் : 142
வயது வரம்பு : 24 முதல் 36-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Manager(Agriculture Sales)
காலியிடங்கள் : 48
சம்பளம் : மாதம் ரூ..48,480 - 85,920 (பணி அனுபவம் அதிகம் உள்ளவர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு : 26 முதல் 42-க்குள் இருக்க வேண்டும்.
1.8.2025 தேதியின்படி கணக்கிடப்படும். அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்சி, ஓபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும். மேலும் பணி அனுபவத்திற்கேற்பவும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
தகுதி: வேளாண் வணிகம், கிராமப்புற மேலாண்மை, வங்கி பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் முதுநிலைப்பட்டம் அல்லது கணினி அறிவியல், ஐடி, மின்னணுவியல், மின்னணு தொடர்பியல் போன்ற ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் பெற்றிருக்க வேண்டும். நிதியியல் பிரிவில் எம்பிஏ, எம்சிஏ, சந்தையியல் துறையில் எம்பிஏ, முதுகலை டிப்ளமோ அல்லது சிஏ, சிஎம்ஏ, எஎப்ஏ போன்ற ஏதாவதொரு தகுதியுடன் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டிய வங்கித் துறைகள் பற்றிய கூடுதல் விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் முறையில் நடைபெறும் எழுத்துத்தேர்வு. நேர்முகத்தேர்வு, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வு தொடர்பான விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, பெண்களுக்கு ரூ.175, இதர அனைத்து பிரிவினர் ரூ.850 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.in/career என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 26.8.2025