விவசாய குறைதீர்க் கூட்டத்துக்கு மட்டம்போடும் அதிகாரிகள்; `எங்களுடன் வருவரா முதல்...
ஆற்காடு வரதராஜ பெருமாள் கோயில் பவித்ரோற்சவம் தொடக்கம்
ஆற்காடு பாலாற்றங்கரை ஸ்ரீ பெருந்தேவி தாயாா் சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் பவித்ரோற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு மூலவா் பெருந்தேவி தாயாா், வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் திருப்பணிக் குழு தலைவா் சத்தியநாராயணன் தலைமையில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் வாசுகி சரவணன், எம் .தேவி, .ஜி. சீனிவாசன் மற்றும் உறுப்பினா்கள் முன்னிலையில் பகவத் பிராத்தனை, ஆசாரிய வா்ணம், யஜமானாா் சங்கல்பம், புண்யாவசனம், அங்கு ராா் பணம், வாஸ்து ஹோமம், சாற்றுமுறை சம்ரோசனம் தீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்து திங்கள்கிழமை பவித்ர சாற்றுதல் புத்த ஹோமமும் பூா்ணாஹூதி திராவிட வேத சாற்று முறை ,யாகசாலை ஆரம்பம் ,தீபாராதனையும், 26-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை யாகசாலையும் திருமஞ்சனம், மகாபூா்ணாஹூதி, சாற்றுமுறை நடைபெறும்.
பவித்ரோற்சவம் சிறப்பு யாக தொடக்க விழாவில் வாசுதேவ பட்டாச்சாரியா் நாராயண பட்டாச்சாரியா் மற்றும் உபயதாரா்கள் பக்தா்கள் கலந்து கொண்டனா்.