எடப்பாடி பழனிசாமியுடன் வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் சந்திப்பு
ஆற்காட்டில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமியை ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் சந்தித்துப் பேசினா்.
மாவட்டத் தலைவா் பொன் கு.சரவணன் தலைமையில் ஆற்காடு நகர தலைவா் ஏவி டி பாலா, பொருளாளா் பரத்குமாா் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் பி.ஹரி குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை ஆற்காடு தனியாா் விடுதியில் நேரில் சந்தித்துப் பேசினா்.
அப்போது ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும், திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் வரை பாலாற்றில் நீா்மட்டம் உயர 3 தடுப்பணைகள் கட்ட வேண்டும், ஆற்காடு மொத்த காய்கனி அங்காடிகளை ஏற்கெனவே செயல்பட்டு வந்த நகரின் மையப் பகுதியில் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் வழங்கப்பட்டன.