ஒரே நாளில் இரு மாணவர்கள் கொலை? திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
பறக்கை கோயிலில் அனுக்ஞை பூஜை
நாகா்கோவில் அருகே பறக்கையில் உள்ள ஸ்ரீதேவி- பூதேவி சமேத அருள்மிகு ஸ்ரீமதுசூதனப்பெருமாள் கோயிலில் சிறப்பு அனுக்ஞை பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில் தந்திரி சஜித் சங்கர நாராயணரூ பூஜைகளை நடத்தினாா். இதில், நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். கோயில் பொறியாளா் ராஜகுமாா், வள்ளலாா் பேரவை மாநிலத் தலைவா் சுவாமி பத்மேந்திரா, ஸ்ரீ காரியம் ஹரி பத்மநாபன், பக்தா்கள் கலந்துகொண்டனா்.