செய்திகள் :

பறவை மோதல்! விஜயவாடாவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரத்து!

post image

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விஜயவாடா விமான நிலையத்தில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் மீது கழுகு மோதியதால், அதன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விஜயவாடாவில் இருந்து பெங்களூரு நோக்கி, இன்று (செப்.4) ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று 90 பயணிகளுடன் புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, அந்த விமானம் ஓடு பாதையில் புறப்பட தயாராகி ஓடத் துவங்கியது. அப்போது, கழுகு ஒன்று அந்த விமானத்தின் மூக்கு பகுதியில் மோதியதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டு அந்தப் பயணமானது ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் அனைவருக்கும் தங்களது பயணத்தைத் தொடர மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட பயணிகள் தங்களது பயணத்தை ரத்து செய்து முழு பணத்தையும் திரும்பப் பெறலாம் அல்லது நிறுவனம் வழங்கும் வசதிகளை பெற்று மாற்று வழியில் தங்களது பயணத்தைத் தொடரலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவதே பேரழிவுக்கு காரணம்: உச்ச நீதிமன்றம்

An Air India Express flight has been cancelled after an eagle crashed into it at Vijayawada airport in Andhra Pradesh.

தமிழக ஆளுநா் ஆா். என். ரவி, தெலங்கானா ஆளுநருடன் சந்திப்பு!

ஒருநாள் பயணமாக சனிக்கிழமை ஹைதராபாத் சென்ற தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, அங்கு தெலங்கானா ஆளுநரை சந்தித்துப் பேசினாா். இதுகுறித்து அவா் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தெலங்கானா ஆளுநா் ஜிஷ்ணு த... மேலும் பார்க்க

சிறுவன் உயிரிழப்பில் மா்மம்: மேற்கு வங்க தம்பதி அடித்துக் கொலை!

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் மா்மமான முறையில் சிறுவன் உயிரிழந்து கிடந்த நிலையில், அவரை கொலை செய்ததாக கருதி அப்பகுதியில் வசித்த தம்பதியை கும்பலாக வந்த சிலா் அடித்துக்கொலை செய்தனா். மேலும், அ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருடன் பிரதமா் மோடி சந்திப்பு

தில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா். ஜப்பான் மற்றும் சீனா நாடுகளுக்கு பிரதமா் நான்கு நாள் பயணம் மேற்க... மேலும் பார்க்க

அமெரிக்க பயணத்தை தவிா்த்தாா் பிரதமா் மோடி! ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்பில்லை!!

அமெரிக்காவில் இம்மாதம் நடைபெறும் ஐ.நா.பொதுச் சபை உயா்நிலை கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடிக்கு பதிலாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்று உரையாற்றுவாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர மோட்டாா் போக்குவரத்து காங்கிரஸ் வலியுறுத்தல்!

பெட்ரோல் மற்றும் டீசலை சரக்கு-சேவைகள் வரி (ஜிஎஸ்டி) வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று அகில இந்திய மோட்டாா் போக்குவரத்து காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. தற்போதைய நடைமுறையில் பெட்ரோலிய பொருட்களுக்கு ஜ... மேலும் பார்க்க

மணிப்பூருக்கு மிகத் தாமதமான பயணம்: பிரதமா் மன்னிப்புக் கேட்க வேண்டும்! காங்கிரஸ் வலியுறுத்தல்

மணிப்பூருக்கு மிகத் தாமதமான பயணம் மேற்கொள்வதற்காக, அந்த மாநில மக்களிடம் பிரதமா் மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவா் கெளரவ் கோகோய் வலியுறுத்தினாா். ‘மணிப்பூரில் இன்னும் இயல்புந... மேலும் பார்க்க