Liechtenstein: விமான நிலையம், நாணயம் இல்லாத சிறிய நாடு; பணக்கார நாடுகளில் ஒன்றாக...
பலூசிஸ்தான் விவகாரம்: சல்மான் கானை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்; என்ன நடந்தது?
பாலிவுட் நடிகர் சல்மான் கான் சமீபத்தில் ரியாத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது அவர் தெரிவித்த சில கருத்துக்கள் பாகிஸ்தானை அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் இந்திய சினிமா பிரபலமடைந்து வருவது குறித்த விவாதத்தில் சல்மான் கான், ஷாருக்கான், ஆமீர்கான் போன்றோர் கலந்து கொண்டனர்.
இந்த விவாதத்தில் பேசிய சல்மான் கான், “இப்போது இந்திப் படம் தயாரித்து இங்கே (சவுதி அரேபியாவில்) வெளியிட்டால் அது சூப்பர் ஹிட்டாகிறது. இதே போன்று தமிழ், தெலுங்கு, மலையாளம் படத்தை எடுத்தால் பல நூறு கோடி அளவுக்கு வியாபாரம் நடக்கிறது.
ஏனென்றால் வெளிநாட்டிலிருந்து பலர் இங்கு வந்திருக்கிறார்கள். பலூசிஸ்தானில் இருந்து ஆட்கள் இருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்... எல்லோரும் இங்கே வேலை செய்கிறார்கள்" என்று சொன்னார்.
பாகிஸ்தானையும், பலூசிஸ்தானையும் தனித்தனியாக சல்மான் கான் குறிப்பிட்டது பாகிஸ்தானுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மக்கள் பல ஆண்டுகளாக தனி நாடு கேட்டு போராடி வருகின்றனர்.
பாகிஸ்தானில் 46 சதவீத இடம் பலூசிஸ்தானை உள்ளடக்கியது ஆகும். சல்மான் கானின் கருத்தை பலூசிஸ்தான் ஆதரவாளர்கள் வரவேற்றுள்ளனர்.
சல்மான் கானின் கருத்து சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இதையடுத்து சல்மான் கானை தீவிரவாதிகள் பட்டியலில் பாகிஸ்தான் சேர்த்திருக்கிறது.
பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் பட்டியலில் சல்மான் கான் பெயரைச் சேர்த்து இருக்கிறது. அப்பட்டியலில் இருப்பவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.
அவர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படும். சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தனது கருத்துக்கு சல்மான் கான் இதுவரை விளக்கம் கொடுக்கவில்லை.
பைக்கில் சென்ற சல்மான் கான்
சல்மான் கான் எப்போதும் படப்பிடிப்புக்குத் தாமதமாக வருவார் என்று ஒரு பேச்சு இருக்கிறது. சமீபத்தில் மும்பை கோரேகாவ் திரைப்பட நகரில் நடக்கும் படப்பிடிப்புக்கு சல்மான் கான் தனது காரில் புறப்பட்டார்.
ஆனால் கார் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொண்டது. இதனால் சரியான நேரத்தில் படப்பிடிப்புக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

உடனே சல்மான் கான் அந்த வழியாக வந்த ஒரு வாலிபரிடம் லிப்ட் கேட்டு இரு சக்கர வாகனத்தில் திரைப்பட நகருக்குச் சென்றார். அவரது பாதுகாவலர்கள் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் சல்மான் கானைப் பின் தொடர்ந்தனர்.
சல்மான் கான் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக தனது முகத்தை கட்டிக்கொண்டு சென்றார்.




















