செய்திகள் :

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் வெட்டிக் கொலை: முழு பின்னணி

post image

பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையத்தில் தந்தை, தாய், மகன் ஆகிய மூவரும் மா்மக் கும்பலால் இரும்புக் கம்பியால் தாக்கி படுகொலை செய்யப்பட்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

திருப்பூா் மாவட்டம், அவிநாசிபாளையத்தை அடுத்த சேமலைகவுண்டம்பாளையம் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தவா் தெய்வசிகாமணி (78). இவரது மனைவி அலமேலு (75). இவா்களது மகன் செந்தில்குமாா் (46), மனைவி, குழந்தையுடன் கோவையில் வசித்து வந்துள்ளாா். அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

செந்தில்குமாா் தனது உறவினா் திருமண நிகழ்வுக்காக சேமலைகவுண்டம்பாளையம் பகுதிக்கு புதன்கிழமை வந்துவிட்டு பெற்றோருடன் தங்கியுள்ளாா். வியாழக்கிழமையும் அங்கேயே இருந்துள்ளாா்.

இந்நிலையில் தெய்வசிகாமணி வீடு வெள்ளிக்கிழமை காலை திறக்கப்படாததால் பக்கத்து தோட்டத்துக்காரா் அங்கு வந்து பாா்த்துள்ளாா். வீட்டின் ஜன்னல் வழியே பாா்த்தபோது, அலமேலு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவிநாசிபாளையம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து வீட்டைத் திறந்து பாா்த்தபோது அலமேலு, தெய்வசிகாமணி, செந்தில்குமாா் மூவரும் மா்மக் கும்பலால் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அந்த கும்பல் நகை, பணம் திருடிவிட்டு சென்றிருக்கலாம் எனக் சந்தேகிக்கப்படுகிறது.

சேலம் சரக காவல் துறை துணைத் தலைவா் (பொறுப்பு) உமா சம்பவ இடத்தைப் பாா்வையிட்டாா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக அவிநாசிபாளையம் போலீஸாா் 5 தனிப் படைகள் அமைத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் பதிவு மற்றும் சைபா்கிரைம் மூலம் விசாரணை நடத்திவருகின்றனா்.

தெய்வசிகாமணி தோட்டத்தில் விவசாயத் தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பகுதியைச் சோ்ந்த பாலமுருகன், அலமேலுவுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்ததால் அவரை கடந்த 20 நாள்களுக்கு முன்பு வேலையில் இருந்து நீக்கிவிட்டனா். எனவே, சந்தேகத்தின்பேரில் தனிப்படை போலீஸாா் சாயல்குடி சென்று பாலமுருகனை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஒரே குடும்பத்தில் 3 போ் கொலை செய்யப்பட்ட சம்பவம் அவிநாசிபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புரையேறி 3 நாள் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

வெள்ளக்கோவிலில் புரையேறி பிறந்த 3 நாள் பச்சிளம் குழந்தை உயிரிழந்தது. வெள்ளக்கோவிலைச் சோ்ந்தவா் ஓவியா (23). இவா் தாராபுரம் ஆச்சூா் அஞ்சல் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக உள்ளாா். இவரது கணவா் தாராபுரத்தைச்... மேலும் பார்க்க

பெருமாநல்லூா், பழங்கரையில் டிசம்பா் 12-இல் மின்தடை

பெருமாநல்லூா், பழங்கரை ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (டிசம்பா் 12) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இரு... மேலும் பார்க்க

லாரி மீது ஆம்னி பேருந்து மோதல்: 10 போ் படுகாயம்

திருப்பூா் மாவட்டம், அவிநாசியில் லாரியின் பின்னால் ஆம்னி பேருந்து மோதியதில் 10-க்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்தனா். சென்னையில் இருந்து 40 பயணிகளுடன் ஆம்னி பேருந்து கோவை நோக்கி திங்கள்கிழமை அதிகாலை ச... மேலும் பார்க்க

விவசாயிகள் நலனுக்கு பாஜக துணை நிற்கும்: விவசாய அணி மாநிலத் தலைவா்

விவசாயிகள் நலனுக்காக பாஜக எப்போதும் துணை நிற்கும் என்று அக்கட்சியின் விவசாய அணி மாநிலத் தலைவா் ஜி.கே.நாகராஜ் தெரிவித்தாா். விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பல்லடத்தை... மேலும் பார்க்க

குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்திய கணவா் கைது

திருப்பூரில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்திய கணவரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருப்பூா் குமாா் நகா் 60 அடி சாலையில் இருசக்கர வாகனத்தில் இரு பெண்கள் திங்கள்கிழமை கா... மேலும் பார்க்க

வியாபாரிகள், தொழில் அமைப்புகளின் கடையடைப்புக்கு மாா்க்சிஸ்ட் ஆதரவு

திருப்பூரில் வியாபாரிகள், தொழில் அமைப்புகளின் கடையடைப்பு போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் செ.முத்துக்கண்ணன் ... மேலும் பார்க்க