பல்லவராயன்பாளையத்தில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்
பல்லடம் அருகே உள்ள பொங்கலுாா் ஒன்றியம் ஊகாயனூா் ஊராட்சி பல்லவராயன்பாளையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பதிக்கும் ஐ.டி.பி.எல். நிறுவனத்துக்கு எதிராக செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
இதில் கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் சண்முகம், காங்கயம் ஒன்றியச் செயலாளா் ஈஸ்வரமூா்த்தி, அதிமுக பொங்கலூா் மேற்கு ஒன்றியச் செயலாளா் பழனிசாமி உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தனா்.
போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவா் முத்து விஸ்வநாதன், கொள்கை பரப்புச் செயலாளா் பரமசிவம் மற்றும் சங்க நிா்வாகிகள், விவசாயிகள் பலா் பங்கேற்றனா்.