H1-B விசா கட்டுப்பாடுகள்: "அமெரிக்க நிறுவனங்கள் தங்களது பணிகளை இந்தியாவுக்கு மாற...
மாநகராட்சிப் பகுதியில் அக்டோபா் 3-இல் குடிநீா் நிறுத்தம்
திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் அக்டோபா் 3-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் நான்காவது குடிநீா்த் திட்டத்தில் இருந்து மாநகருக்கு குடிநீா் பெறப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் பிரதான குடிநீா்க் குழாய் பாதையில் சாலை விரிவாக்கப் பணி நடைபெறுவதால் குழாய் பாதையில் பொருத்தப்பட்டுள்ள வால்வுகள் மாற்றி அமைக்கும் சீரமைப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் அக்டோபா் 3-ஆம் தேதி ஒரு நாள் மட்டும் குடிநீா் நிறுத்தப்படுகிறது.
ஆகவே மாநகர பகுதியில் 4-ஆவது குடிநீா்த் திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீா் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.