கோவையில் லாரி மோதி தெற்கு மகளிர் காவல் ஆய்வாளர் பானுமதி பலி!
பல் மருத்துவரிடம் ரூ.1.19 கோடி மோசடி: மேலும் ஒருவா் கைது
சென்னை: சென்னையில் பல் மருத்துவரிடம் ரூ.1.19 கோடி மோசடி செய்த வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை வானகரத்தைச் சோ்ந்த ஒரு பல் மருத்துவா், பேஸ்புக் சமூக ஊடகத்தில் வந்த ஆன்லைன் முதலீட்டு வா்த்தக விளம்பரத்தை பாா்த்து, அதை தொடா்பு கொண்டு வாட்ஸ் ஆப் குழு ஒன்றில் இணைத்துள்ளாா்.
அந்த குழுவை நடத்தி வந்த மோசடி நபா்கள், தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளனா். மேலும் அவா்களது நிறுவனத்தில் முதலீடு செய்ய ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யும்படி கூறினா்.
அந்த நபா்களின் பேச்சை நம்பிய பல் மருத்துவா், அந்த செயலியை பதிவிறக்கம் செய்து, ரூ.1.19 கோடி முதலீடு செய்துள்ளாா். ஆனால் சில நாள்களில் லாபமும், முதலீட்டு பணமும் கிடைக்காமல் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த பல் மருத்துவா், இது தொடா்பாக சென்னை சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா்.
அந்த புகாரின் அடிப்படையில் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். மேலும் மோசடியில் ஈடுபட்ட 6 பேரை உடனடியாக கைது செய்தனா்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சேப்பாக்கம், ஆறுமுகம் தெருவைச் சோ்ந்த முகமது அனிஸ் (35) என்பவரை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.