செய்திகள் :

பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக்கொண்ட பாரதி கண்ணம்மா தொடர் பிரபலங்கள்!

post image

பல ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகை கண்மணி மனோகரனின் வளைகாப்பு நிகழ்ச்சியில் பாரதி கண்ணம்மா தொடர் பிரபலங்கள் சந்தித்துக்கொண்டுள்ளனர்.

சின்ன திரை பிரபலங்களான கண்மணி மனோகரன் - அஷ்வத் தம்பதியினர் சில நாள்களுக்கு முன்பு தாங்கள் கருவுற்றிருப்பதை அறிவித்தனர்.

இதைக் கொண்டாடும் விதமாக அண்மையில் சிங்கப்பூர் சென்று இருந்தனர். இது தொடர்பான விடியோக்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டனர். இந்த விடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

இந்த நிலையில், கண்மணி மனோகரன் - அஷ்வத் தம்பதியினரின் வளைகாப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் சின்ன திரை பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.

அதிலும் குறிப்பாக பாரதி கண்ணாம்மா தொடரில் கண்மணி மனோகரனுடன் நடித்த அருண்குமார், ஃபரீனா, ஸ்ருதி சண்முகப்பிரியா, ரோஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இது குறித்து கண்மணி மனோகரன் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவில், ”பாரதி கண்ணம்மா தொடர் குழுவினரை சந்தித்து பல ஆண்டுகள் ஆகிறது, நாங்கள் நகைச்சுவையாக பேசிக்கொண்டது நேற்று நடந்ததுபோல் இருக்கிறது.

பாரதி கண்ணம்மா குழு என்பது வெறும் பெயரல்ல, உண்மையான அன்பினால் கட்டமைக்கப்பட்ட குடும்பம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: அரசுக்கு எதிராகப் பேச நடிகர்கள் தயக்கம்: அமலாக்கத் துறைக்குப் பயப்படுகிறார்கள்! -ஜாவேத் அக்தர்

இணை முன்னிலையில் பிரக்ஞானந்தா

ருமேனியாவில் நடைபெறும் சூப்பா்பெட் கிளாசிக் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, டி.குகேஷ் ஆகியோா் 5-ஆவது சுற்றில் டிரா செய்தனா். பிரக்ஞாந்தா மேலும் இருவருடன் இணை முன்னிலையில் இருக்க, குகேஷ் ... மேலும் பார்க்க

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அல்கராஸ்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினாா். ஆடவா் ஒற்றையா் 3-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இட... மேலும் பார்க்க

துளிகள்...

இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, உன்னாட்டி ஹூடா உள்ளிட்டோா் பங்கேற்கும் தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டி செவ்வாய்க்கிழமை (மே 13) தொடங்குகிறது. 19 வயதுக்கு உள்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து சம்மேளன சாம்பி... மேலும் பார்க்க

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: இந்தியாவின் ஆட்டம் நிறைவு

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் இந்தியா்கள் தங்களின் 2-ஆவது சுற்றில் தோல்வியைத் தழுவியதை அடுத்து, போட்டியில் இந்தியாவின் ஆட்டம் திங்கள்கிழமை நிறைவடைந்தது.இதில் மகளிா் ஒற்றையரில் அனாஹத் சிங் 7-11, 11-8,... மேலும் பார்க்க

புரோ லீக் ஹாக்கி: 24 பேருடன் இந்திய மகளிா் அணி

மகளிா் புரோ லீக் ஹாக்கி போட்டியில் ஐரோப்பிய லெக் மோதலுக்காக 24 போ் கொண்ட இந்திய மகளிா் அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.சலிமா டெடெ கேப்டனாக இருக்கும் இந்த அணிக்கு, நவ்னீத் கௌா் துணை கேப்டனாக்கப்பட்ட... மேலும் பார்க்க