செய்திகள் :

பல இயக்குநர்கள் இஷ்டத்துக்கு படப்பிடிப்பு நடத்துகிறார்கள்: ராஜீவ் மேனன்

post image

ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் அதிக நாள்கள் படப்பிடிப்பு செய்யும் இயக்குநர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியளவில் முன்னணி ஒளிப்பதிவாளராக அறியப்பட்டவர் ராஜீவ் மேனன். ’மின்சார கனவு’, ‘கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்’, ‘சர்வம் தாளமயம்’ உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.

இவர் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அக்கதாபாத்திரம் கவனிக்கும்படியாகவும் அமைந்திருந்தது.

இதையும் படிக்க: பொங்கல் வெளியீட்டிலிருந்து விலகும் படங்கள்?

இந்த நிலையில், நேர்காணலில் பங்கேற்ற ராஜீவ் மேனன், “சினிமாவில் டிஜிட்டல் அதிகமானதும் பல இயக்குநர்கள் இஷ்டத்துக்குப் படப்பிடிப்பு நடத்துகின்றனர். மணிரத்னம் இயக்கிய குரு படத்தின் படப்பிடிப்பு 3 மாதங்களில் முடிந்தது. கடல் கொஞ்சம் அதிகம். மணிரத்னம் படத்தில் என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியும்.

ஆனால், இப்போது பல இயக்குநர்கள் காட்சிகளை எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அதற்குள் சிக்கினால் அவ்வளவுதான். ’என்னுடன் பயணியுங்கள்’ என இயக்குநர்கள் சொல்கின்றனர். இது அடிமைத்தனம் மாதிரி இருக்கிறது. தனக்குத் தோன்றும்போது, சிந்தனை வரும்போது என இயக்குநர்கள் நீண்டகாலம் படப்பிடிப்பில் இருக்கின்றனர். ஜூராசிக் பார்க் திரைப்படத்தை 72 நாள்களில் எடுத்து முடிக்கின்றனர்.

ஆனால், நம்மால் சரியாகத் திட்டமிட முடியவில்லை. ஒரு திரைப்படத்திற்குப் பின் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களின் நேரத்தையும் இது பாதிக்கிறது. உண்மையில், திட்டமில்லாமல் படப்பிடிப்பை நடத்தினால் பெரிதாக பாதிக்கப்படுவது தயாரிப்பாளர்கள்தான்.

இதையும் படிக்க: பொங்கல் வெளியீட்டிலிருந்து விலகும் படங்கள்?

இப்போது, பிரம்மாண்டம் வேண்டும் என்பதற்காக பல காட்சிகளிலும் 100 ஜூனியர் நடிகர்களை நிறுத்துவது, 4 கிரேன்களைக் கொண்டுவருவது என அவர்களுக்கான ஆடை, உதவி இயக்குநர்கள் என எவ்வளவு செலவு? இது ஆரோக்கியமான சூழலில்லை.

96, லப்பர் பந்து போன்றவை சிறிய படங்களாக இருந்தாலும் மிக சுவாரஸ்யமாக இருந்தது. சமீபத்தில், என்னை மிகவும் கவர்ந்த திரைப்படம் மஞ்ஞுமல் பாய்ஸ். ஒரு படத்திற்கு நாயகன் முக்கியமில்லை என்கிற விஷயத்தை இப்படத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு காட்சியும் வீணடிக்கப்படவில்லை.” எனத் தெரிவித்தார்.

இயக்குநர் வெற்றி மாறன் விடுதலை - 1 மற்றும் விடுதலை - 2 படங்களின் படப்பிடிப்பை 270 நாள்கள் வரை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

புஷ்பா - 2: கூடுதல் 20 நிமிடக் காட்சிகள் சேர்ப்பு!

புஷ்பா - 2 திரைப்படத்தின் கூடுதல் காட்சிகளை இணைக்க உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா - 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் உலகளவில் ரூ... மேலும் பார்க்க

வரவேற்பைப் பெறும் காதலிக்க நேரமில்லை டிரைலர்!

இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள காதலிக்க நேரமில்லை படத்தின் டிரைலர் வரவேற்பைப் பெற்றுள்ளது.ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஏ. ஆர். ரஹ்மான... மேலும் பார்க்க

யஷ் பிறந்த நாள்: டாக்ஸிக் கிளிம்ஸ் வெளியீடு!

நடிகர் யஷ் நடிப்பில் உருவாகும் டாக்ஸிக் படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.கேஜிஎஃப், கேஜிஎஃப் - 2 படங்களில் நடித்து இந்திய சினிமாவில் ஸ்டாரானவர் நடிகர் யஷ். உலகளவில் கவனம் ஈர்த்த இப்படம் ரூ.1000... மேலும் பார்க்க

இன்று உங்க ராசிக்கு எப்படி?

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.08.01.2025மேஷம்:இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம்... மேலும் பார்க்க

அா்ஜுனா விருது தந்தைக்கு அா்ப்பணம்: துளசிமதி

தமிழக பாரா பாட்மின்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு அண்மையில் அா்ஜுனா விருது அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த விருதை தனது தந்தை முருகேசனுக்கு அா்ப்பணிப்பதாக அவா் தெரிவித்தாா்.காஞ்சிபுரத்தை சோ்ந்த து... மேலும் பார்க்க

பிரீமியர் லீக் கால்பந்து: வோல்வ்ஸை வென்றது நாட்டிங்கம்

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், நாட்டிங்கம் ஃபாரஸ்ட் அணி 3-0 கோல் கணக்கில் வோல்வா்ஹாம்டன் வாண்டரா்ஸ் அணியை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.இந்த ஆட்டத்தில் அந்த அணிக்காக, மோா்கன்... மேலும் பார்க்க