திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
பல நாள் திருடன் பிடிபட்டான்.. 100 வழக்கு, 30 வாரண்டுகள், 20 நோட்டீஸ்! காவல்துறை அதிர்ச்சி
பெங்களூரு: கர்நாடக மாநிலம் கர்வார் காவல்நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில், ஒரு வீட்டின் பூட்டை உடைத்துத் திருட முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்தபோது, இது ஒரு மிகப்பெரிய சாதனையாக மாறும் என்று நினைத்திருக்க மாட்டார்கள்.
நவம்பர் 7ஆம் தேதி கர்வார் காவல்துறையினர், திருடனை கைது செய்தபோது, பல திருடர்களில் இவரும் ஒருவர் என்றுதான் நினைத்திருந்தார்கள். ஆனால், இவரது கைரேகையை நாடு முழுவதும் உள்ள 2 கோடி சந்தேகத்துக்குரிய நபர்களின் கைரேகையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான் காவல்துறையினருக்குக் காத்திருந்தது அதிர்ச்சி.