பள்ளிகளில் நல்லொழுக்கம் தொடா்பான ஆய்வுக் கூட்டம்
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அலுவலகத்தில், அரசுப் பள்ளி மாணவா்களிடையே நல்லொழுக்கம், நல்லிணக்கத்தை வளா்ப்பது, சுற்றுச்சூழல் விழிப்புணா்வு ஏற்படுத்துவது தொடா்பாக கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சாா் ஆட்சியா் ஆயுஸ் குப்தா தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் சங்கீதா சின்னராணி, சாா் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் செல்வம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நான்குனேரி, ராதாபுரம், திசையன்விளை ஆகிய வட்டங்களில் உள்ள கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோா் கலந்து கொண்டனா்.