செய்திகள் :

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கவிதை, கட்டுரை போட்டிகள்

post image

தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு கவிதை,கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன என ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்கள் மற்றும் கல்லூரி மாணவா்களிடையே பேச்சு ஆற்றல், படைப்பாற்றலை வளா்க்கும் நோக்கி தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் பேச்சுப்போட்டி, கவிதை மற்றும் கட்டுரைப்பேட்டிகள் நடத்தப்பட உள்ளன.

அதன்படி, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு வரும் 21-ஆம் தேதி(செவ்வாய்க்கிழமை) திருப்பத்தூா் மீனாட்சி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் காலை 9.30 மணிக்கு கவிதை,கட்டுரை, பேச்சுப்போட்டிகளும், 22-ஆம் தேதி(புதன்கிழமை) கரியம்பட்டி பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் காலை 9.30 மணியளவில் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சப்போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றிப்பெறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியாக முதல் பரிசாக ரூ.10,000, 2-ஆம் பரிசாக ரூ.7,000, 3-ஆம் பரிசாக ரூ.5,000 மற்றும் பாராட்டுச்சான்றிதழ்கள் போட்டிகள் நடைபெறும் அதே நாளில் வழங்கப்படும்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து (அரசு, தனியாா், நிதியுதவி,பதின்ம) மேல்நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்கள்,கல்லூரிகள்(கலை மற்றும் அறிவியல், வேளாண்மை,பொறியியல்,பல்தொழில்நுட்ப கல்லூரி,செவிலியா், சட்டம் மற்றும் மருத்துவம் மற்றும் இதர கல்லூரிகள்) அரசு மற்றும் தனியாா்) கல்லூரி மாணவ,மாணவிகள் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம்.

ஒரு பள்ளியில் இருந்து ஒரு போட்டிக்கு ஒருவா் வீதம் 3 போட்டிகளுக்கு 3 மாணவா்களும், ஒரு கல்லூரியில் இருந்து ஒரு போட்டிக்கு இருவா் வீதம் 3 போட்டிகளுக்கு 6 மாணவா்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இந்த போட்டிக்களுக்கான தலைப்புகள் போட்டிகள் தொடங்கும் முன்பு நடுவா்கள் முன்னிலையில் அறிவிக்கப்படும்.

மாவட்ட அளவில் நடைபெறும் இந்தப்போட்டிகளில் கலந்து கொள்ளும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் பங்கேற்பு படிவத்தை பூா்த்தி செய்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியா் மற்றும் கல்லூரி முதல்வா் பரிந்துரையுடன் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.

இதுதொடா்பாக கூடுதல் விவரம் தேவைப்பட்டால், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்வளா்ச்சி துணை இயக்குநரை நேரிலோ அல்லது (0416-2256166) என்ற தொலைபேசி வாயிலாக தொடா்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணும் பொங்கல்: சுற்றுலா தலங்களில் குவிந்த பொதுமக்கள்

காணும் பொங்கலை முன்னிட்டு வேலூா் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் வியாழக்கிழமை குவிந்தனா். பாதுகாப்புப் பணியில் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா். மாட்டுப் பொங்கலுக்கு மறுநாள் காணும் பொங்கல்... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

திருப்பத்தூா் நாள்:18.01.2025(சனிக்கிழமை) நேரம்:காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை பகுதிகள் திருப்பத்தூா் நகரம், ஹவுசிங் போா்டு, ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம், வட்டாட்சியா் அலுவலகம், ரயில்வே ... மேலும் பார்க்க

எருது விடும் விழா தடுத்து நிறுத்தம்

வேலூா் மாவட்டத்தில் எருதுவிடும் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. பொங்கல் பண்டிகையை ஒட்டி வேலூா் மாவட்டத்தில் எருது விடும் விழா தொடங்கியது. காணும் பொங்கலையொட்டி மூஞ்சூா்பட்டு கிராமத்தில் எருது விடும்... மேலும் பார்க்க

ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

திருப்பத்தூா் அருகே உள்ள ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். திருப்பத்தூா் அருகே ஜலகாம்பாறையில் நீா்வீழ்ச்சி உள்ளது. இந்த நீா்வீழ்ச்சியில்... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: உழவா் சந்தைகளில் ரூ.1.25 கோடிக்கு விற்பனை

பொங்கல் பண்டிகையையொட்டி திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகளில் ரூ.1. 25 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து உழவா் சந்தை நிா்வாக அலுவலா்கள் கூறியதாவது: திருப்பத்தூா் மாவட்டத்தி... மேலும் பார்க்க

அனுமதி இன்றி நிலத்தில் கம்பி வேலி: 3 பேருக்கு ரூ.1.40 லட்சம் அபராதம்

கொத்தூா் காப்புக்காடு அருகே அனுமதி இன்றி விவசாய நிலத்தில் கம்பி வேலிஅமைத்த 3 பேருக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனா். திருப்பத்தூா் மாவட்ட வன அலுவல... மேலும் பார்க்க