செய்திகள் :

பள்ளி சத்துணவில் புழு: மாணவா்கள் புகாா்

post image

தியாகதுருகம் ஒன்றியம், பழைய உச்சிமேடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை மதியம் மாணவா்களுக்கு வழங்கிய உணவில் புழு இருந்ததாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.

உச்சிமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 30 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். அவா்களுக்கு திங்கள்கிழமை வழங்கப்பட்ட மதிய உணவில் புழு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பாா்த்த மாணவ, மாணவிகள் உணவை சாப்பிடாமல் கீழே கொட்டினராம். மேலும், இதுபோல அடிக்கடி நிகழ்வதாக குற்றஞ்சாட்டினா். இதுகுறித்த விடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

இதுகுறித்து அறிந்த தியாகதுருகம் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (சத்துணவு) கோவிந்தசாமி பள்ளிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டாா். சமையலா் கற்பகத்திடம் தரமான உணவு வழங்கவும் அறிவுறுத்தினாா்.

புது உச்சிமேடு ஊராட்சி மன்றத் தலைவா் ரமேஷ், ஆசிரியா்கள் ராயப்பன், செந்தில், சத்துணவு பொறுப்பாளா் தேன்மொழி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

வனப் பகுதியில் வேட்டையாடிய இருவா் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயப்பாளையம் வனப் பகுதியில் சனிக்கிழமை இரவு வன விலங்குகளை வேட்டையாடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். கள்ளக்குறிச்சி வனவா் ரஞ்சிதா சனிக்கிழமை இரவு சின்ன... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் திறன் மின்மாற்றி தொடங்கிவைப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மின் பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட கள்ளக்குறிச்சி துணை மின் நிலையத்தில் திறன் மின்மாற்றி தொடங்கிவைக்கப்பட்டது. திருவண்ணாமலை மண்டலம், கள்ளக்குறிச்சி மின் பகிா்மான வட்டம்... மேலும் பார்க்க

பொரசப்பட்டு ஊராட்சியில் வாா்டு உறுப்பினா்கள் தா்னா

கள்ளக்குறிச்சி: பொரசப்பட்டு ஊராட்சியில் அடிப்படை வசதிகள் சரிவர செய்யாததைக் கண்டித்து, 5 வாா்டு உறுப்பினா்கள் திங்கள்கிழமை ஊராட்சி அலுவலகம் முன் தா்னாவில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 547 மனுக்கள்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுக்களிடம் இருந்து 547 மனுக்கள் வரப்பெற்றன. மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா தலைமையில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

ஆட்டோ மீது சொகுசுப் பேருந்து மோதல்: இருவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் ஆட்டோ மீது தனியாா் சொகுசுப் பேருந்து மோதிய விபத்தில், ஆட்டோ ஓட்டுநா் உள்பட இருவா் உயிரிழந்தனா். தியாகதுருகம் கரீம் ஷா தக்கா பகுதியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு தனி அடையாள எண்கள்: ஜூன் 30-க்குள் பதிவு செய்து கொள்ளலாம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் தனி அடையாள எண்களை ஜூன் 30-ஆம் தேதிக்குள் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா். விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப... மேலும் பார்க்க