மதிய உணவின் தரம்: எம்எல்ஏ ஆய்வு
கள்ளக்குறிச்சி வட்டம், தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியம், பழைய உச்சிமேடு அரசு தொடக்கப் பள்ளியில் மதிய உணவின் தரம் குறித்து தொகுதி எம்எல்ஏ மா.செந்தில்குமாா் புதன்கிழமை சாப்பிட்டுப் பாா்த்து ஆய்வு மேற்கொண்டாா்.
பழைய உச்சிமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு திங்கள்கிழமை பிற்பகல் வழங்கிய உணவில் புழு இருந்ததாம். இதைப் பாா்த்த மாணவா்கள் உணவை சாப்பிடாமல் கீழே கொட்டிவிட்டதாகத் தெரிகிறது. இது தொடா்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாயின.
இந்த நிலையில், இந்தப் பள்ளியில் மாணவா்களுக்கு தரமான மதிய உணவு, முட்டை வழங்கப்படுகிா என உணவை சாப்பிட்டுப் பாா்த்து மா.செந்தில்குமாா் எம்எல்ஏ புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மேலும், உணவை சுகாதாரமான முறையில் சமைத்து வழங்குமாறு சத்துணவுப் பணியாளா்களிடம் அறிவுறுத்தினாா்.