`உள்துறை, நிதித்துறை' சேர்த்து கேட்கும் ஷிண்டே; அமித் ஷாவுடன் பட்னாவிஸ், அஜித்பவ...
பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டப் போட்டியில் வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு
பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டப் போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற மண்ணச்சநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் புதன்கிழமை பாராட்டப்பட்டனா்.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில் மண்ணச்சநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சாலை விபத்து தானியங்கி இயந்திரம் தயாரித்து மாநில அளவில் மூன்றாவது இடம் பெற்றனா்.
இதையடுத்து சாதனை படைத்த மாணவா்கள் செ. கவினேஷ், ரா. முத்துக்குமரன், பா. சஞ்சீவ் குமாா், ச. விஜயராகவன் ஆகியோரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ. கிருஷ்ணப்பிரியா பாராட்டி ரூ. 10 ஆயிரத்திற்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா்.
பின்னா் புதன்கிழமை பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் மாணவா்களை பள்ளித் தலைமையாசிரியா் சி. தண்டபாணி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.