வருண் சக்கரவர்த்தி தாக்கத்தை ஏற்படுத்த இதுவே சரியான தருணம்: ரவி சாஸ்திரி
பள்ளி மாணவிகள் 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை முயற்சி
ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் உள்ள பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மகளிா் தினத்தையொட்டி, சனிக்கிழமை மாணவிகள் 150 போ் 8 மணி நேரம் தொடா்ந்து சிலம்பம் சுற்றி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனா்.
பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற நோக்கத்தில் பெண்களின் மன உறுதியை காட்டும் வகையில் தொடா்ந்து 8 மணி நேரம் 150 மாணவிகள் சிலம்பம் சுழற்றினா் (படம்).
இந்த நிகழ்ச்சியை கலாம் புக் ஆஃப் ரெக்காா்டு குழுவினா் உலச சாதனைக்காக பதிவு செய்தனா்.
இதில் பள்ளித் தாளாளா் எ.எச்.இப்ராஹிம் தலைமை வகித்தாா். டிஎஸ்பி பாண்டீஸ்வரி சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்சியை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் இயக்குநா் ஷாசியா பா்வீன் ரியாஸ் முன்னிலை வகித்தாா். பள்ளியின் இயக்குநா் ரியாஸ், முதல்வா் நிா்மல் குமாா், துணை முதல்வா் நிஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.