செய்திகள் :

பள்ளி விழாவுக்கு 35 ஆடம்பர கார்களில் வந்த 12-ம் வகுப்பு மாணவர்கள்: பெற்றோர் மீது வழக்குப்பதிவு!

post image

பள்ளி ஆண்டு விழாவுக்கு 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 35 ஆடம்பர கார்களில் வந்ததைத் தொடர்ந்து பெற்றோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் அமைந்துள்ள ஃபவுண்டெயின்ஹெட் தனியார் பள்ளியின் ஆண்டுவிழா கடந்த வாரம் நடைபெற்றது. அந்தப் பள்ளியில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பிஎம்டபிள்யூ, மசேரட்டி, மெர்சிடஸ், போர்ஷே போன்ற விலையுயர்ந்த 35 ஆடம்பர கார்களில் ஆண்டு விழாவுக்குச் சென்றனர்.

இவற்றை சூரத் நகர சாலையில் அவர்கள் ஓட்டிச்செல்லும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதில் பல மாணவர்கள் புகை துப்பாக்கிகளைக் கையில் வைத்து ஆபத்தான முறையில் கார் கதவுகளிலும், காரின் சன் ரூஃபில் தலையை வெளியே நீட்டிக் கூச்சலிட்டபடி காரில் சாகம் செய்துகொண்டே சென்றனர்.

இதையும் படிக்க | கார் ஓட்டிக்கொண்டே மடிக்கணினியில் வேலை பார்த்த பெண்: காவல்துறை அபராதம்!

இந்தக் காணொளியைக் கண்ட பலரும் அதிர்ச்சியடைந்த நிலையில், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களில் வரக்கூடாது என மாணவர்களை முன்னரே எச்சரித்ததாக பள்ளி நிர்வாகம் விளக்கமளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, காணொளி வைரலானதால் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய மாணவர்களின் பெற்றோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்துப் பேசிய சூரத் காவல்துறை துணை ஆணையர் ஆர்பி பாரோட், “நாங்கள் 35 கார்களில் 26 கார்களை அடையாளம் கண்டுள்ளோம். அதில், 22 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கார் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அந்தக் காணொளியில் உரிமம் இல்லாத 3 மாணவர்கள் கார் ஓட்டியதும், மற்றவர்கள் ஓட்டுநர் வைத்து காரில் வந்ததும் தெரிய வந்துள்ளது.

அந்த 3 மாணவர்களின் பெற்றொர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆபத்தை ஏற்படுத்தும்படி கார் ஓட்டி சாகசத்தில் ஈடுபட்டவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

கோயில் திருவிழாவில் பக்தர்கள் கூடாரத்தை தாக்கிய யானைகள்! 3 பேர் பலி; 36 பேர் காயம்!

கோழிக்கோடு : கேரளத்தில் கோயில் திருவிழாவில் யானைகள் மதம் பிடித்து ஓடியதில் 3 பேர் பலியாகினர். கோழிக்கோடு மாவட்டம் கோயிலாண்டி அருகேயுள்ள குருவங்காடு மணக்குளங்கரை பகவதி கோயிலில் வியாழக்கிழமை(பிப். 13) ... மேலும் பார்க்க

தலாய் லாமாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு! -மத்திய அரசு தகவல்

தலாய் லாமாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதாக மத்திய அரசு இன்று(பிப். 13) தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள திபெத்தைச் சேர்ந்த புத்த மதத் துறவி தலாய் லாமாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக... மேலும் பார்க்க

உடலுறவு குறித்து சர்ச்சை கருத்து விவகாரம்: யூடியூபருக்கு காவல் துறை சம்மன்!

உடலுறவு குறித்து பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இவ்விவகாரத்தில் தொடர்புடைய யூடியூபர் சமய் ரெய்னா காவல் துறை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்படுள்ளது. என்ன நடந்தது? அண்மையில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

தில்லி விமான நிலையத்தில் ரூ.25 கோடி மதிப்புள்ள கொகைன் பறிமுதல்: 2 பெண்கள் கைது!

தில்லி விமான நிலையத்தில் கடந்த 2 வாரங்களில் ரூ.25.91 கோடி மதிப்பிலான கொகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2 வாரங்களில் தென் அ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: புனித நீராடிய பக்தர்கள் எண்ணிக்கை 49 கோடியைக் கடந்தது!

பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது.மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான இதில், கங்கை, யமுனை மற்று... மேலும் பார்க்க

மாநிலங்களவை மார்ச் 10 வரை ஒத்திவைப்பு!

புது தில்லி : மாநிலங்களவை கூட்டத்தொடர் மார்ச் 10-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.முன்னதாக, மக்களவை இன்று(பிப். 13) கூடியதும் புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்ப... மேலும் பார்க்க