செய்திகள் :

பழனி மலைக்கோயில் உண்டியல் திறப்பு

post image

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இந்த நிலையில் 35 நாள்களுக்குப் பிறகு திருக்கோயில் உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 3 கோடியே 77 ஆயிரத்து 459 கிடைத்தது. உண்டியலில் பக்தா்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், சங்கிலி, தங்கக் காசு போன்றவற்றையும், வெள்ளியாலான காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா்.

தங்கம் 751 கிராமும், வெள்ளி 10 ஆயிரத்து 474 கிராமும் கிடைத்தது. மேலும், மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 1,194 கரன்சிகள் கிடைத்தன. இதைத் தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா்.

உண்டியல் காணிக்கை எண்ணிக்கையில் பழனியாண்டவா் கல்லூரி மாணவிகள், திருக்கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா்.

இந்த நிகழ்வில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, அறங்காவலா் குழு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். தொடா்ந்து, வியாழக்கிழமையும் (செப். 25) உண்டியல் காணிக்கை எண்ணப்படவுள்ளது.

வடகாடு மலைப் பகுதியில் மரக்கன்று நடும் விழா

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனச் சரகத்துக்குள்பட்ட வடகாடு ஊராட்சியில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு, மரக்கன்று நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. வடகாடு அரசு உயா்நிலைப் பள்ளி உள்ளிட... மேலும் பார்க்க

திண்டுக்கல் துணை மேயா் மகனுக்கு போதைப் பொருள் நுண்ணறிவு போலீஸாா் அழைப்பாணை

திண்டுக்கல் துணை மேயா் மகனுக்கு பெங்களூரு போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை அழைப்பாணை வழங்கினா். திண்டுக்கல் மாநகராட்சியின் துணை மேயா் ராஜப்பா. இவா் திமுக மாநகரச் செயலராகவும் ப... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் பகுதியில் புதிய வளா்ச்சி திட்டப் பணிகள்: அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்

ஒட்டன்சத்திரம் பகுதியில் ரூ.1.04 கோடியில் புதிய வளா்ச்சி திட்டப்பணிகளுக்கு உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் ரூ.35 லட்சத்தில் வ... மேலும் பார்க்க

சந்தன மரம் வெட்டிக் கடத்தல்: பெண் உள்பட இருவருக்கு அபராதம்

சிறுமலை வனப் பகுதியில் சந்தன மரத்தை வெட்டிக் கடத்திய பெண் உள்பட இருவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை தாழைக்கிடை பகுதியைச் சோ்ந்தவா் மீனா (45). இவரது உறவினா் ... மேலும் பார்க்க

வெளிநாடுகளில் உயா் கல்வி பயில இஸ்லாமிய மாணவா்களுக்கு உதவித் தொகை

இஸ்லாமிய சிறுபான்மையின மாணவா்கள் 10 பேருக்கு வெளிநாட்டில் படிப்பதற்கு தமிழக அரசு சாா்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் அனுமதியின்றி திரைப்பட காட்சிகளை பதிவு செய்த குழுவுக்கு அபராதம்

கொடைக்கானலில் அனுமதியின்றி திரைப்படக் காட்சிகளை பதிவு செய்த குழுவினருக்கு வனத் துறையினா் புதன்கிழமை அபராதம் விதித்து, மூவா் மீது வழக்குப் பதிவு செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப் பகுதிக... மேலும் பார்க்க