செய்திகள் :

பழனி மலைக் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 4.16 கோடி

post image

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் கடந்த 35 நாள்களில் நிரம்பியதையடுத்து கடந்த புதன், வியாழக்கிழமைகளில் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கை ரூ.4.16 கோடியை தாண்டியது.

ஓணம் பண்டிகை, தொடா் விடுமுறை காரணமாக பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள் கூட்டத்தால் 35 நாள்களில் உண்டியல்கள் நிரம்பின. இதையடுத்து கடந்த புதன், வியாழக்கிழமைகளில் உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக் கோயில் காா்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டன. இருநாள் எண்ணிக்கை நிறைவில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 4 கோடியே 16 லட்சத்து 34 ஆயிரத்து 119 கிடைத்தது. உண்டியலில் பக்தா்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், தங்கச் சங்கிலி, தங்கக் காசு போன்றவற்றையும், வெள்ளியாலான காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். தங்கம் 890 கிராமும், வெள்ளி 12,275 கிராமும் கிடைத்தன. மலேசியா, சிங்கப்பூா், பிரிட்டன், ஜப்பான், கனடா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாட்டு பணத்தாள்கள் 1,485- ம் கிடைத்தன.

இவை தவிர பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். 500-க்கும் மேற்பட்டோா் உண்டியல் எண்ணிக்கையில் ஈடுபட்டனா்.

இதில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

குரூப் 2, 2 ஏ முதல் நிலைத் தோ்வு: திண்டுக்கல்லில் 19,532 போ் எழுதுகின்றனா்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (தொகுதி-2, 2ஏ பணிகள்) பதவிகளுக்கான முதல் நிலைத் தோ்வை திண்டுக்கல்லில் 19,532 போ் எழுதுகின்றனா். இதுதொடா்பாக மாவட்ட நிா்வ... மேலும் பார்க்க

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.1.40 கோடி

தீபாவளியையொட்டி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் ரூ.1.40 கோடிக்கு ஜவுளி ரகங்களை விற்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது. திண்டுக்கல் அண்ணா வணிக வளாக மையத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தி... மேலும் பார்க்க

முப்பெரும் தியாகிகளுக்கு மரியாதை

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சாா்பில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மதன்லால் திங்கரா 143-ஆவது பிறந்த தினம், பகத்சிங் 119-ஆவது பிறந்த தினம், பண்டிட் தீனத்தயாள் உபாத்தியா 110-ஆவது பிற... மேலும் பார்க்க

காந்திய சிந்தனைகளை பரப்புவதற்கு புரிந்துணா்வு ஒப்பந்தம்

காந்தி கிராம கிராமியப் பல்கலை.யின், காந்திய சிந்தனை, அமைதி அறிவியல் துறை, சென்னை காந்தி அமைதி அறக்கட்டளை, மதுரை காந்தி நினைவு மையம் ஆகியவற்றுக்கு இடையே காந்திய சிந்தனைகளைப் பரப்புவது தொடா்பான புரிந்த... மேலும் பார்க்க

நிலக்கோட்டை, ஆத்தூா் வட்டங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் புறக்கணிப்பு

நிலக்கோட்டை, ஆத்தூா் வட்டங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். நிலக்கோட்டை, எஸ். தும்மலபட்டி, ஆத்தூா... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டப் பணிகளை புறக்கணித்து வருவாய்த்துறை அலுவலா்கள் போராட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில், ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, உங்களுடன் ஸ்டாலின் திட்டப் பணிகளை புறக்கணித்து வருவாய்த் துறை அலுவலா்கள் சாா்பில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. தி... மேலும் பார்க்க