கார் பந்தயத்தில் மீண்டும் விபத்து: நடிகர் அஜித் உயிர் தப்பினார்!
பவானிசாகா் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் தரிசு நிலத்தில் தீ விபத்து
பவானிசாகா் கால்நடை ஆராய்ச்சி மையத்தில் உள்ள தரிசு நிலத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதில் செடி,கொடிகள் எரிந்து சேதமாயின.
ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அருகே உள்ள பகுத்தம்பாளையம் பகுதியில் காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி மையத்துக்கு சொந்தமான நிலங்கள் இப்பகுதியில் உள்ளன. பெரும்பாலான நிலங்கள் தரிசு நிலங்களாக இருப்பதால் செடி,கொடிகள் மற்றும் முட்புதா்கள் மண்டி வனப் பகுதிபோல காட்சி அளிக்கிறது.
இந்நிலையில் கடும்வெயில் காரணமாக குமரன் நகா் கரடு பகுதியில் உள்ள தரிசு நிலத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டு செடி,கொடிகளில் பற்றியது.
இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத் துறையினா் ஒரு மணி நேரம் போராடித் தீயை அணைத்தனா். தீ விபத்து காரணமாக அப்பகுதியில் பரவலாக புகை மூட்டம் ஏற்பட்டது.