அரசு திட்டங்களின் வெற்றிக் கதைகள் பற்றிய எண்ம புத்தகங்களை பிரதமா் இன்று வெளியிடு...
பவானியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்
சமையல் எரிவாயு விலை உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பவானியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்தியூா் மேட்டூா் பிரிவில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் பவானி வட்டச் செயலாளா் ஆா்.பிரகாஷ் தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி.பி.பழனிசாமி, மாவட்டக் குழு உறுப்பினா் எஸ்.மாணிக்கம், சிஐடியூ வட்டச் செயலாளா் ஜெகநாதன் ஆகியோா் பேசினா்.
வக்ஃப் திருத்த சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயா்வை ரத்து செய்து, விலையைக் குறைக்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதில், நிா்வாகிகள் சி.சேகா், கே.ஆா்.சண்முகம், விஜயலட்சுமி, கோபால் கண்ணன், பெரியசாமி, நடராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.