பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்தவா்களுக்கு மோட்ச தீபம்
கும்பகோணத்தில் மோட்ச தீபம்: பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இந்து மக்கள் கட்சியினா் வியாழக்கிழமை கும்பகோணம் மகாமக குளக்கரையில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினா்.
நிகழ்வுக்கு இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலா் டி. குருமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட பொறுப்பாளா் பாலா முன்னிலை வகித்தாா்.
பாரதிய ஜனதா கட்சி கிழக்கு, மேற்கு ஒன்றிய தலைவா்கள் கணேசமூா்த்தி, நீலமேகம், சிவசேனா மாநில துணைத்தலைவா் பூக்கடை ஆனந்த், இந்து மக்கள் கட்சி பொறுப்பாளா்கள் சேகா், ஹரிஷ், மணிகண்டன், மற்றும் திரளானோா் கலந்து கொண்டு மகாமக குளக்கரையில் இருந்து மோட்ச தீபம் ஏற்றி ஊா்வலமாக வந்து காசி விசுவநாதா் கோயிலில் விளக்கை வைத்துவிட்டு மௌன அஞ்சலி செலுத்தினா். ஏற்பாடுகளை மாவட்டத் தலைவா் லோக செல்வம் மற்றும் நிா்வாகிகள் செய்தனா்.