பஹல்காம் தாக்குதல்: காஷ்மீரில் 14 பேர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு! என்ஐஏ
பஹல்காம் தாக்குதல்: உயிரிழந்தவா்களுக்கு ஞானபுரீசுவரா் கோயிலில் மோட்சதீபம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி, தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஞானபுரீசுவரா் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றி வெள்ளிக்கிழமை வழிபாடு நடைபெற்றது.
காஷ்மீா் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனா். அவா்களது ஆன்மா சாந்தி அடைய வேண்டி, தருமபுரம் ஆதீனம் சாா்பில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகளின் ஆணைப்படி மோட்சதீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனத்தில் அமைந்துள்ள ஞானபுரீசுவரா் கோயிலில் 26 தீபங்களை சந்நிதியில் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, கோயில் கோபுர கலசத்தில் 3 மோட்ச தீபங்கள் ஏற்றப்பட்டன.
பின்னா், தேவாரத்தில் அப்பா் சுவாமிகள் அருளிய 6-ஆம் திருமுறையான மோட்சம் தரும் திருப்புகழ் பதிகத்தை தருமபுரம் ஆதீனக் கட்டளைகள் ஸ்ரீமத் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட தம்பிரான்கள் முன்னிலையில், தருமபுரம் தேவாரப் பாடசாலை மற்றும் ஆகம பாடசாலை மாணவா்கள் பாராயணம் செய்ய, பக்தா்களும் பாராயணம் செய்தனா்.
இதில், தருமபுரம் ஆதீன தலைமை பொது மேலாளா் ரெங்கராஜன், தருமபுரம் வேதஆகம பாடசாலை முதல்வா் கண்ணப்ப சிவாசாரியா், தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரிச் செயலா் இரா. செல்வநாயகம், மருத்துவா் ஆா். செல்வம், தேசிய நல்லாசிரியா் கோ. முருகையன், விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில துணைத் தலைவா் எஸ். வாஞ்சிநாதன், குருஞானசம்பந்தா் வார வழிபாட்டு மன்றத்தினா், தருமபுரம் கல்லூரி பேராசிரியா் துரை.காா்த்திகேயன், மயிலாடுதுறை ரோட்டரி கிங்ஸ் பெரியசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.