செய்திகள் :

பஹல்காம்: முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுபவர் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் வீரர்!

post image

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஹாஷிம் மூசா என்பவர் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் சிறப்புப் படை வீரராக இருந்தவர் என்று இந்திய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேரைக் கொன்றவர்களின் புகைப்படங்களை, காயமடைந்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் வரைந்து போலீசார் வெளியிட்டனர்.

அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த சுலைமான் என்ற ஹாஷிம் மூசா மற்றும் தல்ஹா பாய் என்ற அலி பாய் என்பதும் மற்றொருவர் அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த அபித் ஹுசைன் தோக்கர் என்பதும் கண்டறியப்பட்டது.

இதில், ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக்கைச் சேர்ந்த ஹுசைனின் வீட்டைப் பாதுகாப்புப் படை வீரர்கள் குண்டுவைத்து தகர்த்தனர்.

இந்த நிலையில், ஹாஷிம் மூசா குறித்த அதிர்ச்சித் தகவல்கள் தற்போது விசாரணையில் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவ வீரர்

ஹாஷிம் மூசா என்பவர் பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்புப் படையில் பணியாற்றியவர். பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்து வெளிவந்த அவர், தடைசெய்யப்பட்ட லஷ்கர் - ஏ - தொய்பாவில் இணைந்துள்ளார்.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவுக்குள் ஊடுருவி, ஸ்ரீநகர் அருகிலுள்ள புட்காம் மாவட்டத்தில் பதுங்கியிருந்து சதித்திட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

காஷ்மீரில் சதித்திட்டங்களுக்கு வலுசேர்க்கும் விதத்தில், லஷ்கர் - ஏ - தொய்பாவில் இணைய பாகிஸ்தான் ராணுவமே ஹாஷிம் மூசாவிடம் கேட்டுக் கொண்டிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பயிற்சி பெற்ற சிறப்புப் படை வீரரான மூசா, போர் மற்றும் ரகசிய நடவடிக்கைகளில் நிபுணத்துவம் பெற்றவராக இருக்கலாம் எனத் தெரிகிறது. இத்தகைய பயிற்சி பெற்றவர்கள் அதிநவீன ஆயுதங்களை கையாள்வதில் திறம்பட செயல்படக் கூடியவர்களாக இருப்பார்கள்.

மூன்று தாக்குதல்களில் மூசாவுக்கு தொடர்பு

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுபவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மூசா குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளது.

கடந்த 2024 அக்டோபர் மாதம், காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், ஒரு மருத்துவர், இரண்டு ராணுவ வீரர்கள், வெளியூரைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கும் பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மேலும், 2024 இல் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட 3 தாக்குதல்களில் மூசாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் குழுக்கள் மூலம் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் தங்குமிட வசதிகள் செய்து தரப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் பல பயங்கரவாதிகளுக்கு பஹல்காம் தாக்குதலில் தொடர்பு இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : உளவுத் துறை எச்சரிக்கை: ஜம்மு - காஷ்மீர் சுற்றுலாத் தலங்களை மூட உத்தரவு!

மே 29-ல் விண்வெளி மையத்துக்குச் செல்கிறார் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா!

இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா மே 29-ஆம் தேதி சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா். அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் பெல்கான் ராக்கெட் மூலம் அவர் விண்வெளிக்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி: முப்படைகளுக்கு முழு சுதந்திரம் - மோடி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி தருவது தொடா்பான முடிவுகளை மேற்கொள்ள முப்படைகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி முழு சுதந்திரம் அளித்துள்ளார். மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் சந்திப்பு!

பிரதமர் நரேந்திர மோடியை அவரின் இல்லத்திற்குச் சென்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் உடனான உறவில் விரிசல் ஏற்பட்டு இந்தியாவ... மேலும் பார்க்க

மே 14-ல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்கிறார் பி.ஆர். கவாய்!

உச்சநீதிமன்றத்தின் 52 வது தலைமை நீதிபதியாக மே 14 ஆம் தேதி, பூஷன் ராமகிருஷ்ண கவாய் பதவியேற்கிறார்.புதிய தலைமை நீதிபதியாக கவாய் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரை செய்திருந்தார். இந்தப... மேலும் பார்க்க

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆவணங்கள் தானம்!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆவணங்கள் தேசிய ஆவணக் காப்பகத்திற்கு அவரது குடும்பத்தினரால் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவரும், ஏவுகணை நாயகன் என... மேலும் பார்க்க

ஹரியாணாவில் ஐஸ்கிரீம் விற்கும் பாக்., முன்னாள் எம்.பி.! இந்தியாவில் இருக்க அனுமதி!

பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. தபயா ராம், ஹரியாணாவில் ஐஸ்கிரீம் விற்று தனது குடும்பத்தை கவனித்து வருகிறார். இவரின் குடும்பத்தில் 34 உறுப்பினர்கள் உள்ள நிலையில், 6 பேர் மட்டுமே இந்தியக் குடியுரி... மேலும் பார்க்க