பாகம்பிரியாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.35 லட்சம்
திருவெற்றியூா் பாகம்பிரியாள் சமேத வல்மிக நாதா் கோயில் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.35 லட்சம் கிடைத்தது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூரில் பாகம்பிரியாள் சமேத வல்மிகநாதா் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள உண்டியல்கள் திறந்து செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டது.
இதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.35 லட்சத்து 3ஆயிரத்து 69, தங்கம் 318 கிராம், வெள்ளி 245 கிராம் இருந்தது.
இந்த காணிக்கை எண்ணும் பணியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான மேலாளா் இளங்கோ, கண்காணிப்பாளா் செந்தில் குமாா், கெளரவ கண்காணிப்பாளா் சுந்தர்ராஜன், இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.