செய்திகள் :

பாகிஸ்தானுக்கான உலகளாவிய நிதியை முடக்கும் இந்தியா?

post image

பாகிஸ்தானுக்கு உலகளாவிய நிறுவனங்கள் அளிக்கும் நிதியுதவியை மறுபரிசீலனை செய்ய இந்தியா கோரவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட மற்றும் வழங்கப்படவிருக்கும் நிதி மற்றும் கடன்களை மறுபரிசீலனை செய்ய சர்வதேச நாணய நிதியம் உள்பட உலகளாவிய நிதி நிறுவனங்களிடம் இந்தியா கோரிக்கை விடுக்கவிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

பாகிஸ்தானுக்கு பொதுத்துறை கடன்கள், மானியங்கள், தொழில்நுட்ப உதவிகள் என மொத்தம் 43.4 பில்லியன் டாலர்களை வழங்கிய ஆசிய மேம்பாட்டு வங்கி, காலநிலை பின்னடைவு கடன் திட்டத்தின்கீழ், 1.3 பில்லியன் டாலர் அளிக்கும் சர்வதேச நாணய நிதியத்திடமும் இந்தியா கோரவுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைக்க 320 மில்லியன் டாலர் வழங்கவும் ஆசிய மேம்பாட்டு வங்கி உறுதியளித்திருந்தது.

இந்த நிதியுதவி குறித்தும், பாகிஸ்தானுக்காக 20 பில்லியன் டாலர் கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் குறித்தும் மறுபரிசீலனை செய்ய இந்தியா கோரிக்கை விடலாம் என்றும் கூறுகின்றனர்.

இதையும் படிக்க:டிரம்ப் 100 நாள்கள்! நூற்றுக்கு நூறு பெற்றாரா?

பிரதமர் மோடியுடன் ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா சந்திப்பு

தில்லியில் பிரதமர் மோடியை ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா சனிக்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து இருவரும் விவாதி... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் முன்வரிசையில் நிற்க அனுமதி கர்நாடக அமைச்சர் கோரிக்கை!

பாகிஸ்தான் மீதான போருக்கு ஆதரவளிப்பதாக கர்நாடக அமைச்சர் ஜமீர் அகமது கான் தெரிவித்துள்ளார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ... மேலும் பார்க்க

கோவாவில் கோயில் திருவிழாவில் 6 பேர் பலி: 50,000-க்கும் மேற்பட்டோர் ஒரேநேரத்தில் திரண்டதால் நெரிசல் - கோயில் நிர்வாகம்

பனாஜி: கோவா யூனியன் பிரதேசத்திலுள்ள பிச்சோலிம் பகுதியில் பிரசித்திபெற்ற 'ஸ்ரீ லய்ராயி திருக்கோயில்’ அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ‘ஜாத்ரா’ திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் சுற்றுவட... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடன் அனைத்து வகையான கடிதம் மற்றும் பார்சல் போக்குவரத்துக்குத் தடை

பாகிஸ்தானுடன் அனைத்து வகையான கடிதம் மற்றும் பார்சல் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தான் மீது இந்தியா ராஜீய ரீதியில் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று தடைகள்! இதனால் என்னவாகும்?

பாகிஸ்தானுடன் அனைத்து வகையான கடிதம் மற்றும் பார்சல் போக்குவரத்துக்கும் தடை விதித்தது மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த தடை உத்தரவால், பாகிஸ்தானில் இருந்து அஞ்சல் பரிமாற்றம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்... மேலும் பார்க்க

பாக். மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவேன் - காங். அமைச்சர் ஆவேசம்!

பெங்களூரு: பாகிஸ்தான் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக கர்நாடக அமைச்சர் ஸமீர் அகமது கான் ஆவேசமாக பேசியிருக்கிறார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதல் ... மேலும் பார்க்க