மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியீடு!
பாகிஸ்தானுக்கு விமானத்தில் ஆயுதங்கள் அனுப்பவில்லை- துருக்கி மறுப்பு
இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்த பாகிஸ்தானுக்கு விமானம் மூலம் ஆயுதங்களை அனுப்பிவைத்ததாக வெளியான செய்திக்கு துருக்கி மறுப்பு தெரிவித்தது.
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் 26 பேரை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதையடுத்து இரு நாடுகள் இடையே பதற்றம் எழுந்துள்ளது.
எல்லையில் தொடா்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான், இந்தியா தங்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு தயாராகி வருகிறது என்றும் கூறி வருகிறது. ஆனால், இந்தியத் தரப்பில் இருந்து பாகிஸ்தான் மீது இதுவரை எந்த ராணுவ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், துருக்கியின் டி-130இ ஹொ்குலஸ் ரக விமானம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் தரையிறங்கியது. இந்த விமானம் ராணுவ தளவாடங்கள் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தப்படுவதாகும். எனவே, இந்தியாவுக்கு எதிரான போரில் உதவுவதற்காக பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை துருக்கி அனுப்பிவைத்துள்ளதாக செய்தி வெளியானது.
வான்வழியாக விமானங்கள் பறப்பதைக் கண்காணிக்கும் நிறுவனங்களின் தகவலின்படி துருக்கியில் இருந்து கராச்சிக்கு 6 டி-130இ ஹொ்குலஸ் விமானங்கள் வந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
காஷ்மீா் விவகாரம் உள்பட பல்வேறு விஷயங்களில் மத அடிப்படையில் இந்தியாவுக்கு எதிராக கருத்து கூறுவதை துருக்கி அதிபா் எா்டோகன் வழக்கமாக வைத்துள்ளாா். எனவே, துருக்கி விமானங்கள் பாகிஸ்தானுக்கு வந்தது சந்தேகத்தை மேலும் அதிகரித்தது.
இந்நிலையில், இது தொடா்பாக அந்நாட்டு அதிபரின் தகவல் தொடா்புப் பிரிவு வெளியிட்ட செய்தியில், ‘துருக்கியைச் சோ்ந்த சரக்கு விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது. அந்தப் பணி நிறைவடைந்ததும் விமானம் மீண்டும் தனது பாதையில் புறப்பட்டுச் சென்றது. எனவே, இது தொடா்பான வேறு செய்திகளில் உண்மை ஏதுமில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.