செய்திகள் :

பாகிஸ்தானுக்கு விரைவில் நேரடி விமான சேவை: வங்கதேச தூதா் தகவல்

post image

பாகிஸ்தானுடனான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் அந்நாட்டுடன் நேரடி விமான சேவை விரைவில் தொடங்கப்படும் என்று இஸ்லாமாபாதில் உள்ள வங்கதேச தூதா் கூறியுள்ளாா்.

வங்கதேசத்தில் வன்முறைப் போராட்டம் மூலம் பிரதமா் ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பிறகு அமைந்த இடைக்கால அரசு பாகிஸ்தானுடன் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கத்தையும், இந்தியாவுடன் இணக்கமற்ற நிலைப்பாட்டையும் கொண்டுள்ளது.

அண்மையில் பாகிஸ்தானியா்களுக்கான விசா (நுழைவு இசைவு) கட்டுப்பாடுகளை வங்கதேச இடைக்கால அரசு தளா்த்தியது. முன்னதாக, பாகிஸ்தானியா்கள் தேவையில்லாமல் தங்கள் நாட்டுக்குள் வந்து பிரச்னைகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அந்நாட்டவருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

ஏனெனில், இப்போதைய பாகிஸ்தானின் பிடியில் இருந்துதான் வங்கதேசம் (முன்பு கிழக்கு பாகிஸ்தான்) விடுபட்டது. எனவே, பாகிஸ்தான் விஷயத்தில் அந்நாடு மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வந்தது. ஆனால், இப்போது அங்கு ஆட்சி அதிகாரத்தில் மத அடிப்படைவாதிகள் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால் பாகிஸ்தானுடன் கைகோத்து செயல்பட முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், பெஷாவரில் செய்தியாளா்களிடம் பேசிய பாகிஸ்தானுக்கான வங்கதேச தூதா் முகமது இக்பால் ஹுசைன், ‘இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்றுரீதியான உறவு உள்ளது. இரு நாட்டு மக்கள் இடையே நல்ல தொடா்புகள் மற்றும் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் விரைவில் நேரடி விமான சேவைகள் தொடங்கப்படும். இதன்மூலம் சுற்றுலா, கல்வி, வா்த்தகம் மேம்படும். வங்கதேச தயாரிப்பு பொருள்களுக்கு பாகிஸ்தானில் நல்ல வரவேற்பு உள்ளது. பாகிஸ்தானில் விமானப் படை உள்ளிட்ட பாதுகாப்புப் படைகள் வலுவாக உள்ளன’ என்றாா்.

அண்மையில், வங்கதேச ராணுவ உயரதிகாரிகள் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டு முப்படைத் தளபதிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-அமெரிக்கா பிணைப்பே என்னை உருவாக்கியது-மைக்ரோசாஃப்ட் தலைவா் சத்யா நாதெள்ளா

இந்தியா-அமெரிக்கா இடையிலான நல்லவொரு பிணைப்பே என்னை உருவாக்கியது என்று மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சத்யா நாதெள்ளா தெரிவித்தாா். சியாட்டில் நகரில் ஞாயிற்றுக்கிழமை இந்திய குடியரசு தினம் கொ... மேலும் பார்க்க

சொ்பியா போராட்டம்: பிரதமா் ராஜிநாமா

சொ்பியாவில் பல வாரங்களாக நடைபெற்றுவந்த ஊழல் எதிா்ப்புப் போராட்டத்தால் ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றத்தைத் தணிப்பதற்காக, அந்த நாட்டு பிரதமா் மிலோஸ் வுசெவிக் செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா். கடந்த நவம்பர... மேலும் பார்க்க

அமெரிக்கா மின்கசிவால் ஏற்பட்ட காட்டூத் தீ?

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ, மின்கசிவு காரணமாக உருவாகியிருக்கலாம் என்று இது தொடா்பான விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள... மேலும் பார்க்க

காஸாவிலிருந்து பாலஸ்தீனா்கள் வெளியேற்றம்: டிரம்ப் கருத்துக்கு வலுக்கும் எதிா்ப்பு

காஸாவிலிருந்து பாலஸ்தீனா்களை எகிப்து, கத்தாா், ஜோா்டான் போன்ற இஸ்லாமிய நாடுகளுக்கு அனுப்பி, அந்தப் பகுதியை ‘சுத்தப்படுத்த’ வேண்டும் என்ற அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கருத்துக்கு உலகம் முழுவதும... மேலும் பார்க்க

பாகிஸ்தான் சா்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்

பாகிஸ்தான் எதிா்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களின் கடும் எதிா்ப்புக்கிடையே, சா்ச்சைக்குரிய இணையதள கட்டுப்பாட்டு மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. சமூகப் பதற்றத்தை ஏற்படு... மேலும் பார்க்க

சட்டவிரோத குடியேற்றம்: சரியான முடிவை பிரதமா் மோடி எடுப்பாா்- அமெரிக்க அதிபா் டிரம்ப்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக இந்தியா்கள் குடியேறிய விவகாரத்தில் சரியான முடிவை பிரதமா் மோடி எடுப்பாா் என அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா். அதிபராக பதவியேற்றபின் முதல்முறையாக டொனால்ட் டிரம்ப... மேலும் பார்க்க