செய்திகள் :

பாகிஸ்தான் தாக்கினால் வலுவான பதிலடி கொடுக்கப்படும்: பிரதமர் மோடி

post image

புதுதில்லி: பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டால், வலுவான பதிலடி கொடுக்கப்படும் என ஞாயிற்றுக்கிழமை போர் நிறுத்தம் குறித்து அமெரிக்கா துணை அதிபர் ஜே.டி.வான்ஸிடம் தொலைபேசியில் பேசியபோது பிரதமர் மோடி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

"ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கை மூலம் ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ஆயுதப் படைகள் புதன்கிழமை (மே 7) அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின. இதில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் கோட்டையான பஹவல்பூர் மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவின் தளமான முரிட்கே ஆகியவை அழிக்கப்பட்டன.

பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், பதற்றத்தைத் தணிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் அமெரிக்க அமெரிக்கா துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தொலைபேசியில் பேசினார்.

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் நாடு பாதுகாப்பாக இருக்காது: ராஜ்நாத் சிங்

அப்போது, பாகிஸ்தான் தாக்கினால் இந்தியா கடுமையான பதிலடி கொடுக்கும். சிந்து நதி நீர் ஒப்பந்தம் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துடன் தொடர்புடையது. இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்கும் வரை, சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவடையவில்லை. இயல்பு நிலையில்தான் இருக்கிறது. பாகிஸ்தான் சுட்டால் நாங்களும் சுடுவோம், தாக்கினால் நாங்களும் தாக்குவோம். பாகிஸ்தானின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் வலுவான பதிலடி கொடுக்கப்படும். இந்த விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா ஏற்காது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு இந்தியா பதிலடி கொடுப்பதில் புதிய வழக்கம் ஏற்பட்டுள்ளது. இனி எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் அதிக விலை கொடுக்க நேரிடும்.

மேலும், பயங்கரவாதிகளை ஒப்படைப்பது குறித்து பேசினால் பேசுவதற்கு தயார் என மோடி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேடையிலேயே திடீரென மயங்கி விழுந்த நடிகர் விஷால்

கூவாகம் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் விஷால் மேடையிலேயே மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சாா்பில், கூவாகம் த... மேலும் பார்க்க

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

மேட்டூா்: மேட்டூா் அனல் மின் நிலையத்தில் டீசல் குழாயில் உடைந்ததால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டம் மேட்டூா் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிர... மேலும் பார்க்க

சேலத்தில் தம்பதி வெட்டிக் கொலை: போலீஸார் விசாரணை

சூரமங்கலம்: சேலம் சூரமங்கலம் அருகே உள்ள ஜாகிா் அம்மாபாளையம் பகுதியில் மளிகைக் கடை நடத்திவந்த வயதான தம்பதி ஞாயிற்றுக்கிழமை பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின... மேலும் பார்க்க

பொறியியல் கலந்தாய்வு: 91,414 பேர் விண்ணப்பம்!

பொறியியல் கலந்தாய்வுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை 91 ஆயிரத்து 414 பேர் க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.2025 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பப் பத... மேலும் பார்க்க

டிஜிட்டல் மோசடி: 8 மாநிலங்களில் 42 இடங்களில் சிபிஐ சோதனை

இணைய (சைபா்) குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் சிம் கார்டு மோசடி வழக்குகளில் தொடா்புடையவா்களுக்குச் சொந்தமான 8 மாநிலங்களில் 42 இடங்களில் ‘ஆபரேஷன் சக்ரா 5’ என்ற பெயரில் சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

உலகளாவிய தொழில்நுட்ப முன்னணி மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது: பிரதமர் மோடி

India Emerging as Global Tech Leader, Says PM Modiபுதுதில்லி: உலகளாவிய தொழில்நுட்ப முன்னணி மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேசிய தொழில்நுட்ப நாள் ஒவ்வொரு ஆண்டும் மே ... மேலும் பார்க்க