செய்திகள் :

பாக்கியலட்சுமி சீரியலின் கடைசி நாள் படப்பிடிப்பு; 'அனைத்திற்கும் நன்றி'- இனியாவின் உருக்கமான பதிவு!

post image

விஜய் டிவியில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒளிப்பரப்பாகி வந்த பிரபல 'பாக்கியலட்சுமி' தொடர் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. 

தற்போது இறுதிக்கட்ட எபிசோடுகள் தொடர்பான காட்சிகள் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் குடும்பத்தின் செல்ல மகளான இனியா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நேஹா, தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி வருகிறது.

இனியா (நேஹா)

நேஹாவின் இன்ஸ்டாகிராம் பதிவில், "கிட்டத்தட்ட 6 வருடங்கள் பாக்கியலட்சுமி சீரியல்! இது மறக்கமுடியாத ஒரு பயணம். இந்த இடம் செட்டாக இல்லை, ஒரு வீடாக மாறியது. குழுவினர் அனைவரும் குடும்பமாக மாறினார்கள்.

ஒவ்வொரு ஷாட்டும், டேக்கும் என்னுடைய ஒரு பகுதியானது. எப்போதும் அவை எளிதாக இருந்ததில்லை. நீண்ட இரவுகள், கடினமான நாட்கள், சந்தேகங்கள் எல்லாமே இருந்தன.

அதே நேரம் சிரிப்பு, வளர்ச்சி, நடிப்பின் மீது காதல் கொள்ள வைத்த தருணங்கள் எல்லாம் இருந்தது. இன்று கடைசியாக படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியே வந்தப்போது வெறும் சீரியலை முடிக்கவில்லை. நினைவுகள், பாடங்கள், நன்றியுணர்வு நிறைந்த இதயத்தை என்னுடன் சுமந்து செல்கிறேன். நான் சந்திந்த ஒவ்வொருத்தருக்கும், தருணத்திற்கும், எனக்கு இந்த திட்டம் கொடுத்த அனைத்திற்கும் நன்றி. என்னை வாழ வைத்த இந்த கதைக்கு நன்றி." எனக் குறிப்பிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

"பாக்கியலட்சுமி பார்த்துட்டு 20 பேருக்கு மேல இப்படிக் கிளம்பிட்டாங்க" - அனுபவம் பகிரும் ப்ரியா தம்பி

சுமார் ஐந்தாண்டுகள் ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி சீரியல் ஆகஸ்ட் 8ம் தேதியுடன் நிறைவடைகிறது. விஜய் டிவி வரலாற்றில் அதிக எபிசோடுகள் ஒளிபரப்பான தொடர் என்கிற பெருமையைப் பெற்றிருக்கும் இந்த சீரியலின் கி... மேலும் பார்க்க

Madhampatty Rangaraj:`6வது மாதமாக குழந்தையைச் சுமக்கிறேன்'- மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்த ஜாய்

நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தனது ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிறிசில்டாவைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.கோவை மாதம்பட்டியைச் சேர்ந்தவர் ரங்கராஜ். சமையல் கலைஞராக இருந்து நடிகராக உயர... மேலும் பார்க்க

டிவி நடிகர் சங்கத் தேர்தல்: வேட்பு மனு நிராகரிப்பு; போட்டியிடும் வாய்ப்பை இழந்த ரவீனா; பின்னணி என்ன?

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்த நடிகை ரவீனாவின் வேட்பு மனுவைத் தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.சுமார் 2,000 உறுப்பின... மேலும் பார்க்க