சீனாவில் பரவும் புதிய தீநுண்மி: மக்கள் அச்சப்பட வேண்டாம் -தமிழக பொது சுகாதாரத் ...
பாக்சிங் டே டெஸ்ட்: இந்தியா தோல்வி !
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது.
மெல்பர்னில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் முதல இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 474 ரன்கள் குவித்த நிலையில் இந்தியா 369 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதில், நிதீஷ் குமார் ரெட்டி சதமடித்ததன் காரணமாக இந்திய அணி கௌரவமான ஸ்கோரை எட்டியது.
நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து இன்று ஐந்தாம் நாளில் விளையாடிய ஆஸ்திரேலியா மேலும் 6 ரன்கள் எடுத்ததும் எஞ்சிய ஒரு விக்கெட்டையும் இழந்தது.
2ஆவது இன்னிங்ஸில் அந்த அணி 234 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற கடின இலக்கை துரத்திய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 84, ரிஷப் பந்த் 30 தவிர்த்து மற்ற இந்திய வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.
பாக்ஸிங் டே டெஸ்ட்டில் வரலாற்று சாதனைகள்!
டிரா ஆகும் என எதிர்பார்க்கட்ட நிலையில் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இந்தியா தனது இரண்டாவது இன்னிங்கிஸில 155 ரன்களில் சுருண்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ், போலண்ட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. தொடரின் 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜன. 3ஆம் தேதி சிட்னியில் தொடங்குகிறது.